„இல்லாள்“

மூன்று முடிச்சில் உன் மூச்சைச் சுவாசிப்பாள்
மூச்சு இருக்கும்வரை உன்னை நேசிப்பாள்
இச்சை தீர்த்து உன்னை மகிழ்விப்பாள்
இன்ப துன்பத்தில் பங்கேற்கும் இல்லத்தாள்

நீ உண்ணும் எச்சிலை உண்பாள்
எண்ணும் பேச்சில் அவள் பெண்பால்
கண்ணும் ,கருத்தும் என்றும் உன் பால்
கணவன் போற்றும் பெண்தான் இல்லாள்

உன் உயிரைச் சுமக்கும் மறுபிறப்பு
உடல் வளர்த்து உயிர் கொடுக்கும் உபசரிப்பு
உடன்பட்டு உன்னோடு பயணிக்கும் உயிர்த்துடிப்பு
உலகில் தாரம் ஆணுக்குக் கிடைத்த அன்பளிப்பு

சம்சாரம் போனால் சகலதும் போகும் மெய்யாலும்
சந்தோசம் தரும் தாரம் வாழ்வில் உல்லாசம்
சந்தேகம் வந்தால் வாழ்வு உனக்கு சந்நியாசம்
சந்தோசமாக வாழும் வாழ்வே சம்சாரம்

அன்னைக்கு அடுத்து அரவணைக்கும் அன்புள்ளம்
பெண்ணுக்கு என்றைக்கும் பெரும் உள்ளம்
பண்டைய காலத்தில் சொன்னான் பல காரணம்
உண்மை தான் தாய்க்குப் பின் தாரமென்ற உதாரணம்

கவித்தென்றல் ஏரூர்