இவரால்..கவிஞர் தயாநிதி

இவரால்
தான் இவருக்கு
பல விதமான
இடைஞ்சல்…

இடம்
பொருள்
ஏவலறியாது
திறப்பதினால்
இனாமாகத்
தொல்லைகள்…

இலவசத்
தொலைபேசி
வட்சப் வைபர்
ரியூட்டரில்
தேவை தாண்டிய
உரை…..

நிரை நிரையாய்
தொடர் துன்பம்
கண்டபடி
திறப்பதனாலும்
கண்டதையும்
அரைப்பதனாலும்
கொழுப்பும் கூடி
கொலஸ்ரோல்.

வாய்க் கொழுப்பு
வாயாடி.
அறுவை
அலம்பல் என
சிறப்பு பட்டங்கள்
சீர் குலைத்து
கும்மியடிக்கும்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken