ஈழத் தமிழர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த = செல்வி ஏ.எம்.சி.ஜெயசோதி =சிறப்பு நினைவுப் பதிவு.

ஈழத் தமிழர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த வானொலி,தொலைக்காட்சி நடிகை செல்வி.ஏ.எம்.சி
ஜெயசோதி அவர்கள், 1981 ம் ஆண்டு தனது கலைப்பயணத்தை தொடங்கினார். முதலில் வானொலி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
2054 நிகழ்ச்சிகளை இவர் வழங்கி இருக்கின்றார். வானொலி நாடகங்கள் மட்டும் 1860 பல நாடகத் தயாரிப்பாளர்களின் நெறியாள்கையில் நடித்துள்ளார். மீதி 194 நிகழ்சிகளை இவர் உரைச்சித்திரம், கவிதை, நேயர் கடிதங்கள் வாசித்தல்,கிராம சஞ்சிகை போன்ற நிகழ்சிகளில் கலந்து நிரப்பி உள்ளார்.இது ஒரு பெரிய சாதனை அல்லவா. இனி, ஜெயசோதி மேடை நாடகங்களில் 1982 ல் நடிக்கத் தொடங்கினார் இதுவரை 86 மேடை நாடகங்களில் நடித்து முத்திரை
பதித்துள்ளார்.ஈழத்தின் தலை சிறந்த மேடை நாடக நடிகர்களுடன் ஈட்டிக்கு போட்டியாக நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றவர்.இதில் 66 நாடகங்கள் இலங்கையிலும்,13 நாடகங்கள் ஐரோப்பிய நாடுகளிலும்,7 நாடகங்கள் கனடாவிலும் நடித்துள்ளார்.அடுத்து ஜெயசோதியின் தொலைக்காட்சி பிரவேசம் 1984 ல் தொடங்கியது.
இவர் 38 தமிழ் தொலைக்காட்சி நாடகங்களும்,இரண்டு சிங்கள நாடகங்களும் நடித்து புகழ்பெற்றவர்.இவர் விளம்பர நிகழ்சிகளிலும் தனது குரலை பதிவு செய்து
பாராட்டைப் பெற்றவர்.181 வானொலி விளம்பரங்களில் குரல் கொடுத்துள்ளார்.7 தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி நடித்துள்ளார்.இவர் 2005 காலப்பகுதியில் திரு.“சோக்கல்லோ“ சண்முகம் அவர்களின் 24 வில்லுப்பாட்டு நிகழ்சிகளிலும் கலந்து
அந்த நிகழ்சிகளை சிறப்பாக்கி உள்ளார்.ஜெயசோதி,
„மெதுவாக என்னைத் தோடு“ „போராடு“ ஆகிய இரண்டு குறுந்திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரனின் „வாத்தியார் வீட்டில்“ „கிராமத்துக் கனவு“ உட்பட எட்டு ஒலிநாடா நாடகங்களிலும் நடித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றவர்.இவருக்கு திரு.“அப்புக்குட்டி“ ராஜகோபால் அவர்களுடன் நடித்த „செல்லமணி“ பாத்திரம் மிகச் சிறந்த கொடையாகும்.15 க்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு (டப்பிங்) பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.இனி என்னுடன் பல நாடகங்களில் நடித்துள்ளார். அதில் „தலைமுறை இடைவெளி““கிருகப்பிரவேசம்““வெள்ளோட்டம்“ என்பவை குறிப்பிட தக்கவை.ஒரே நாடகத்தில் இரண்டு பாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் மிக கெட்டித்தனம் மிக்கவர். குரலை மாற்றி பாத்திரத்துக்கு தக்கபடி நடிப்பதில் இவருக்கு நிகர் இவரேதான் என்று சொல்லுவேன்.அப்படி இவர் நடித்த நாடகங்களில் „தலைமுறை இடைவெளி““ஒரு மலர் உதிர்கிறது“ „இமயம்“ போன்றவை மிக சிறப்பான நாடகங்கள்.இதில் „தலைமுறை இடைவெளியில்“ நான் கதாநாயகன். இது எனக்கு மகிழ்ச்சி.அதில் கதாநாயகியாக நடித்த அமரர் கமலினி செல்வராசனுக்கு அம்மாவாகவும்,பாட்டியாகவும் நடித்து பின்னிப் பிடலெடுத்திருப்பார்.
செல்வி A M C ஜெயசோதி அவர்களுக்கு 2002 ஆண்டு,
அவர் நடித்த „அகதிச் சிறுவனுக்கு அட்மிசன் கிடைக்கிறது“ என்ற மேடை நாடகத்திற்காக, சிறந்த
மேடை நடிகைக்கான அரச விருதும்,2017 ம் ஆண்டு
சிறந்த வானொலி நடிகைக்கான அரச விருதும் கிடைத்துள்ளன. இவரின் திறமைக்கு இந்த விருதுகள்
போதாது.மக்களின் மனங்களிலே என்றும் இவர் இருக்கின்றார் என்பதும், இவருடைய குரலும்,அதை அவர் கையாளும் விதமும்.குரலில் உள்ள ஏற்ற இறக்கமும்தான் இவருக்கு நிரந்தர விருதுகளாக இவருடன் என்றும் இருக்கின்றது.நான் தாயகம் செல்லும் ஒவ்வொரு முறையும் எனது நூல் அறிமுக விழாவில் வந்து கலந்து கொள்ளுவார்.என்னை மகிழ்ச்சிப் படுத்துவார்.பழைய நினைவுகளை நினைவு கூர்வார்.இந்த அற்புத,திறமைமிக்க நடிகைக்கு ஆண்டவர் நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்று பிராத்திப்போம்.வானொலி,தொலைக்காட்சி நடிகை செல்வி.ஏ.எம்.சி
ஜெயசோதி அவர்கள், 1981 ம் ஆண்டு தனது கலைப்பயணத்தை தொடங்கினார். முதலில் வானொலி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
2054 நிகழ்ச்சிகளை இவர் வழங்கி இருக்கின்றார். வானொலி நாடகங்கள் மட்டும் 1860 பல நாடகத் தயாரிப்பாளர்களின் நெறியாள்கையில் நடித்துள்ளார். மீதி 194 நிகழ்சிகளை இவர் உரைச்சித்திரம், கவிதை, நேயர் கடிதங்கள் வாசித்தல்,கிராம சஞ்சிகை போன்ற நிகழ்சிகளில் கலந்து நிரப்பி உள்ளார்.இது ஒரு பெரிய சாதனை அல்லவா. இனி, ஜெயசோதி மேடை நாடகங்களில் 1982 ல் நடிக்கத் தொடங்கினார் இதுவரை 86 மேடை நாடகங்களில் நடித்து முத்திரை
பதித்துள்ளார்.ஈழத்தின் தலை சிறந்த மேடை நாடக நடிகர்களுடன் ஈட்டிக்கு போட்டியாக நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றவர்.இதில் 66 நாடகங்கள் இலங்கையிலும்,13 நாடகங்கள் ஐரோப்பிய நாடுகளிலும்,7 நாடகங்கள் கனடாவிலும் நடித்துள்ளார்.அடுத்து ஜெயசோதியின் தொலைக்காட்சி பிரவேசம் 1984 ல் தொடங்கியது.
இவர் 38 தமிழ் தொலைக்காட்சி நாடகங்களும்,இரண்டு சிங்கள நாடகங்களும் நடித்து புகழ்பெற்றவர்.இவர் விளம்பர நிகழ்சிகளிலும் தனது குரலை பதிவு செய்து
பாராட்டைப் பெற்றவர்.181 வானொலி விளம்பரங்களில் குரல் கொடுத்துள்ளார்.7 தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி நடித்துள்ளார்.இவர் 2005 காலப்பகுதியில் திரு.“சோக்கல்லோ“ சண்முகம் அவர்களின் 24 வில்லுப்பாட்டு நிகழ்சிகளிலும் கலந்து
அந்த நிகழ்சிகளை சிறப்பாக்கி உள்ளார்.ஜெயசோதி,
„மெதுவாக என்னைத் தோடு“ „போராடு“ ஆகிய இரண்டு குறுந்திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரனின் „வாத்தியார் வீட்டில்“ „கிராமத்துக் கனவு“ உட்பட எட்டு ஒலிநாடா நாடகங்களிலும் நடித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றவர்.இவருக்கு திரு.“அப்புக்குட்டி“ ராஜகோபால் அவர்களுடன் நடித்த „செல்லமணி“ பாத்திரம் மிகச் சிறந்த கொடையாகும்.15 க்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு (டப்பிங்) பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.இனி என்னுடன் பல நாடகங்களில் நடித்துள்ளார். அதில் „தலைமுறை இடைவெளி““கிருகப்பிரவேசம்““வெள்ளோட்டம்“ என்பவை குறிப்பிட தக்கவை.ஒரே நாடகத்தில் இரண்டு பாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் மிக கெட்டித்தனம் மிக்கவர். குரலை மாற்றி பாத்திரத்துக்கு தக்கபடி நடிப்பதில் இவருக்கு நிகர் இவரேதான் என்று சொல்லுவேன்.அப்படி இவர் நடித்த நாடகங்களில் „தலைமுறை இடைவெளி““ஒரு மலர் உதிர்கிறது“ „இமயம்“ போன்றவை மிக சிறப்பான நாடகங்கள்.இதில் „தலைமுறை இடைவெளியில்“ நான் கதாநாயகன். இது எனக்கு மகிழ்ச்சி.அதில் கதாநாயகியாக நடித்த அமரர் கமலினி செல்வராசனுக்கு அம்மாவாகவும்,பாட்டியாகவும் நடித்து பின்னிப் பிடலெடுத்திருப்பார்.
செல்வி A M C ஜெயசோதி அவர்களுக்கு 2002 ஆண்டு,
அவர் நடித்த „அகதிச் சிறுவனுக்கு அட்மிசன் கிடைக்கிறது“ என்ற மேடை நாடகத்திற்காக, சிறந்த
மேடை நடிகைக்கான அரச விருதும்,2017 ம் ஆண்டு
சிறந்த வானொலி நடிகைக்கான அரச விருதும் கிடைத்துள்ளன. இவரின் திறமைக்கு இந்த விருதுகள்
போதாது.மக்களின் மனங்களிலே என்றும் இவர் இருக்கின்றார் என்பதும், இவருடைய குரலும்,அதை அவர் கையாளும் விதமும்.குரலில் உள்ள ஏற்ற இறக்கமும்தான் இவருக்கு நிரந்தர விருதுகளாக இவருடன் என்றும் இருக்கின்றது.நான் தாயகம் செல்லும் ஒவ்வொரு முறையும் எனது நூல் அறிமுக விழாவில் வந்து கலந்து கொள்ளுவார்.என்னை மகிழ்ச்சிப் படுத்துவார்.பழைய நினைவுகளை நினைவு கூர்வார்.இந்த அற்புத,திறமைமிக்க நடிகைக்கு ஆண்டவர் நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்று பிராத்திப்போம்.பதிவேற்றம் கோவிலுர் செல்வராஐா