ஈழவாணியின் நூல் வெளியீடு

இந்தியா, தமிழ்நாடு பூவரசி வெளியீடுகள் பதிப்பக நிறுவனம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையுடன் இணைந்து நடத்துகின்ற காப்பு எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது .

தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்த விழாவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் தே. செந்தில்வேலவர் தலைமை தாங்குவார் ..

இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் 50 பேரின் சிறுகதைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு தொகுப்பு நூலாக இந்த காப்பு நூல் வெளிவர இருக்கின்றது. இந்த நூலின் முதல் பிரதியை ஐ பி எம் கேம்பஸ் தலைவர் ஜனகன் விநாயகமூர்த்தி பூவரசி பதிப்பகத்தின் தலைவி ஈழவாணி அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வார். இந்த விழாவில் இலக்கியத்துறைக்கு பணியாற்றிய ஐந்து சிரேஷ்ட பெண் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவ் வெளியிட்டு விழாவில் சிரேஷ்ட எழுத்தாளர் சிவலிங்கம் சதீஷ்குமார் , திருமதி வசந்தி தயாபரன் , தினக்குரல் ஆசிரியர் பாரதி ராஜநாயகம், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் அபர்ணா சுதன், திருமதி கீதா கணேஷ் , ஷர்மிளா வினோதினி உட்பட பலரும் உரையாற்றுவார்கள் ஈழவாணி ஏற்புரையை நிகழ்த்துவார்