உன்னதன்…!

உடுத்திராய்
படுத்திராய்
உண்டிராய்
உனக்கானதில்
ஒன்றையுமே
கண்டிராய்..!
மண்டியிட்டிராய்..

வானையும்
பூமியையும்
வலமும்
இடமுமாய்
வணங்கிய படி
பலமாய்
எழுதிடுவாய்
எங்களுக்காய்
வாழ்வமைத்தாய்..!

கற்றோடு
கதை பேசி
மண்ணோடு
உரையாடி
உழுது தினம்
பண்படுத்தி
விண்ணிடம்
மழைக்கு
விண்ணப்பித்து
வியாபித்து\நிற்பாய்,.

அற்றிலே
நீர் வற்றிட
அழுது புலம்பி
நாற்றுக்கள்
வாடாமால்
அனுதினம்
பாடுபடுவாய்..

அறுவடைக்
காலம் உங்களுக்கு
பொற்காலம்.
சேற்றிலே
உன் பாதம்
பட்டதினால்
இன்றுவரை
எம் கரம்
சோற்றிலே…

உங்கள் வளம்
கருகிட! எங்கள்
வயிறு பிற்சா
பகர் எனும்
பாஸ் புட்டினால்
நோயையும்
சேர்த்து விழுங்குது
உங்கள்
ஒட்டிய வயிற்றினை
யார் உணர்வார்?

கவிஞர் ரி .தயாநிதி