உன்னுடலில் ஓடுவது எக்குருதி…? !கவிதை கவிமகன்

நான் கண்டேன்…
என் பசிக்கு உணவிட்டோரை
என் படுக்கையில் ஒன்றாய்
துயின்றோரை
நேற்றுவரை காதலித்து
கரம் கொண்டோரை
ஆயிரமாயிரமாய்
எரித்தழித்தீர் நான் கண்டேன்…
என் பாட்டனும் பூட்டனும்
தம் உயிர் கொண்டு
விதையிட்ட விருட்சத்தையல்லவா
நீர் முறித்ததை நான் கண்டேன்

ஏனடா என்
கேள்விக்கு பதிலேது
உங்கள் உடல்களில் ஓடுவது
செங்குருதியின்றி
கருங்குரங்கினத்தின்
சிவந்த குருதியா
ஆறறிவுள்ளவன் ஆற்றுவானா
இக்காரியம்…?
மோட்டு சிங்களவன் என
பெயரெடுத்த விஜயனின்
வாரிசே…
நீயன்றேற்றிய
தீயின் நாக்குகள் என்னையே
தின்றதை
அறிவாயா?

நீ எரித்தது புத்தகமல்ல
நீ சிதைத்தது ஏடுகளல்ல
நீ அழித்தது கடதாசியல்ல
நீ ஒழித்தது நூலகமல்ல
நீ அழித்தது என் உடல்
நீ அழித்தது என் உயிர்
நீ அழித்தது என் எதிர்காலம்
நீ அழித்தது என் வரலாறு

முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளியிட
முதல்புள்ளி இங்குதானே வைத்தாய்
அதில் கோடு போட்டு
உன் கோவணத்தில்
தீயை மூட்டியதை
மறந்திருக்க மாட்டாய்
ஆண்மை உள்ளவன் என்று
ஊருக்குள் பீத்துகிறவனே
நீ ஆண்மை இழந்தது
முப்பத்தாறாண்டுகள்
அதனால் தானே
சீனாவையும் இந்தியாவையும்
போட்டி போட்டுக் கொண்டு
உன் உள்ளாடைக்குள்
மறைத்துக் கொண்டாய்
அவர்தம் வயகரா தந்தல்லவா
உனக்கு விருந்தூட்டினர்

உங்கள் உயிர்களை தின்று
ஏப்பம் விட்டவனே…
வலியைத் தாங்கித் தாங்கி
என் உடல் வலியதாகிவிட்டது
நீ எரித்த என் புத்தகங்களின்
சாம்பல் கூட எமக்கு அறிவூட்டும்
அதில் இருந்து
பிறப்பெடுத்த சாம்பல் மேட்டு
குஞ்சாக
உன் கோவணம் எரிக்க
வருவான் என்பிள்ளை
கேள்
அன்று என்னினத்திடம்
நீ பறித்த கண்ணீர் கூட
போதாது.
உன் கோவணத் தீ அணைக்க…

உன் கால்களுக்குள் எரியும்
தீயணைக்கும் வல்லமை உனக்கேது
எரிந்து சாம்பராகும்
உன் ஆண்மையும்
வெந்து வீணாகும் உன் பெண்மையும்
நான் படித்து
நீ எரித்த என் புத்தகங்களின்
உயிர்ப்புக்கு சான்றாகும்…

இவ்வாறெழுதத்தான்
என்கும் ஆசை
எப்பிடி முடியும் உன்
கோவணத்துக்குள் இன்று
என்னவருமல்லவா
பதுங்கி கிடக்கின்றனர்
சீனனோடு சேர்ந்து
இழித் தமிழனுமல்லவா
இரத்தம் பாச்சுகிறார்…
நீ எரிக்கும் என் வீட்டு கூரைக்கு
அவர்களல்லவா
எண்ணை ஊற்றுகிறனர்
என்செய்வேன் பகைவனே…?
என் தமிழ் காக்க
நீ எரித்த தமிழை எண்ணி
கலங்குவதை தவிர….?

ஆக்கம் இரத்தினம் கவிமகன்…