ஊடகவியலாளர்B.h. Abdul Hameedவிருதுபெற்றார்

‘காற்றில் கலை படைக்கும் துர்பாக்கியசாலிகள்’ என, எம்போன்ற இலத்திரனியல் ஊடகவியலாளர்களை நான் குறிப்பிடுவதுண்டு.
காரணம்? அச்சு ஊடகவியலாளர்களின் ஆக்கங்கள், தலைமுறைகடந்தும் சாட்சி சொல்ல நிலைத்திருக்கும். நமது பங்களிப்புகளோ! காற்றோடு காற்றாகக் கலந்து மறைந்து மறந்து போகும். அவ்வப்போது சிலர் நுணிப்புல் மட்டும் மேய்ந்து பாராட்டுவதும் உண்டு.
என்னிலும் பார்க்கக் திறமையும்,பெருமையும் மிகு, ஒலிபரப்பாளர்கள் பலர் காலத்தால் மறக்கபட்டதுண்டு.
இலங்கையில் வழங்கப்படும் பெரும்பாலான விருதுகள் விண்ணப்பித்தவர்களுக்கே வழங்கப்படும் மரபும் உண்டு.
ஆனாலும் ‘Ada Derana’ ஊடகத்தின், அறிவார்ந்த நடுவர் குழு நீண்ட ஆய்வின் அடிப்படையில் தெரிவு செய்த ‘விருதுக்குரியவர்கள்’ வரிசையில் அடியேனும் இடம்பெற்றது ஒரு அபூர்வ நிகழ்வே.
சகோதர மொழி ஊடகமாயினும், ஒரு தமிழ் மொழி ஊடகவியலாளனை, அதுவும் ‘உலகளாவிய மட்டத்தில்’ தெரிவு செய்து பெருமைப்படுத்திய ‘Ada Derana’ ஊடகத்தினருக்கு நன்றி.
இச்செய்தியை, பெருமையோடும் உரிமையோடும் முகநூலில் முதன்முதலில் பதிவு செய்த அருமைச் சகோதரர் கே. சந்திரசேகரனுக்கு, நெஞ்சார்ந்த நன்றி. நூற்றுக்கணக்கில் தொடரும் ‘முகநூல் நேசநெஞ்சங்களின்’ அன்புநிறைந்த வாழ்துகளுக்கும், நெஞ்சு நெகிழ்ந்த நன்றி.