ஊர்ந்திடும்_நினைவுகள்.

கடைசி வாங்கிலிருந்து அடித்த அரட்டைகள்

வீட்டுப் பாடவேலை செய்யாது வேண்டிக் கட்டிய பிரபம்தடி அடிகள்
வேண்டாம் வேண்டாமென நினைத்தாலும் நினைவாக ஏனோ வந்து போகுதே..
கணித கொப்பி வாங்கி
கடைசி பக்கத்தில் கஸ்தூரிக்கு காதல் கடிதம் எழுதி 
கண்டுபிடித்த கணக்கு வாத்தியார் களிசான் கழர கழர கட்டிப் போட்டு உரிச்சது கண்முன் வந்து மீளுதே..

பசுமை நினைவுகள் மனதில் சுமையாகுதே
பள்ளிக் கால பருவங்கள் பனித் துளியாகுதே
அள்ளிப் போடும் அவள் தாவணி நிறமே நிழலாடுதே
அடித்த ராக்கெட்டிற்கு அசைந்து திரும்பிட அவளது ஓரப்பார்வைகள் அழகாகுதே

போர் காலமதில் பொத்தியடி காதை புழுதி கிளம்ப ஓடி பங்கருக்குள் பதுங்கிய காலம் கனவுகளிலும் என்னை விடுவதாயில்லை..
காலணி இல்லாது கடைசி ஆளாய் கல்லூரி போனது
வேளைக்கு வரவில்லை என வகுப்பறை வெளியே நின்று தொலையென வாத்தியார் திட்டிப்போனது
இனியும் இனியும் வராதே என்றாலும் இந்த நினைவுகள் இன்னும் எனை விட்டு தொலைவதாயில்லை…
?பவளம்.