„எங்கள் தாய்நிலம்“ கவிதை ஈசன் சரண்

இன்றைய எங்கள் தாய்நிலம்
கடும் வறட்சி
நிலத்தடி நீரோ
நீண்டதூரம்
போய்விட்டது
காய்த்துக்குலுங்கும்
கனிமரங்கள்
இன்று
சோர்வுற்று
வாடிக்கருகி…
நீருக்குப்
பஞ்சம்
பட்டகஸ்ரம்
பாழாகிப்போறது
தொலைநோக்குப்
பார்வை
எம்மில்
துளிகூட இல்லை
மழைநீரைச்
சேகரிக்க
எங்கள்
மனதிற்குத்
தோண்றல
தேங்கிய
நீரையும்
வாய்கால்
வெட்டி
ஓடவிட்டு
சந்தோசச்
சிரிப்பில்
தளைத்திருந்த
அன்றைய
பொழுதுகள்
இன்று
தேம்பியள
வைத்துக்
காலம்
கதைபேசுது
மழை நீரைச்
சேகரிப்போம்
இதை
நாளும்
மனதிற்
கொள்ளுவோம்
பசுமைக்குப்
புரட்சி செய் மனிதா
எதிர்காலம்
இருளகன்று போக!!!
அன்புடன்
ஈசன் சரண்(நாக கேதீஸ்)