எனது ஆற்றுகை தேர்வு 11.April 2020வந்து சிறப்பிக்கும்மாறு அன்புடன் பென்சியா!

எல்லா புகழும் இறைவனுக்கே!

எனது 7வது வயதில் பரதம் படிக்க ஆசைபட்டு அடம்பிடித்து எனது பிறப்பிடமான பிறேமன் நகரில் திருமதி ஶ்ரீ ரன்ஞினி குணரத்தினம் அவர்களிடம் மாணவியாக சேர்ந்தேன்.
14/15 வயதில் ஆளமான ஆர்வம் தோன்றியது. 2012 பொது பல்கலைக்கழக நுழைவு தகுதி படிப்பு முடிந்ததும் எனது கல்வி பயணத்தை தொடர வேறு நகரத்துக்கு சென்றதாலும், எனது குருவின் உடல் நலம் அவருக்கு பரதம் கற்பிக்க இடையூறாக இருந்ததாலும், எனது பரதநாட்டிய பயணம் 1 1/2 வருடம் நிரந்தர குருவின்றி தடங்கள்களுக்கு உட்பட்டிருந்தது. அந்த சமயம் திருமதி அமலா அன்ரனி அவர்களின் அனுகிரகம் கிடைத்தது என்று சொல்வது அவருக்கு மிகையாகாது. 2014ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அவரிடம் இருந்து பரதத்தையும், நற்குணங்களையும் இன்னும் பல வாழ்கைக்கான பாடங்களையும் கற்று வருகிறேன். அவர் எனக்கு குருவாக மற்றுமின்றி, ஒரு தாயாகவும், தோழியாகவும் எனக்கு துணைநிற்கின்றார் என்பதை நினைத்து பூரிப்படைகின்றேன். எனது ஆற்றுகையின் முதல் ஊன்றுகோல் அவர் தான்.

2016இல் இருந்து ஶ்ரீ ரன்ஞனி நடனாலையம் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகின்றேன். மேலும் மேலும் எனது குருவின் ஆதரவுடன் கற்பிக்க கற்றுக்கொள்கின்றேன்.

இதுவரை எனது கலைப்பயணத்துக்கு மிக பெரும் ஆதரவாக இருந்தது கண்டிப்பாக எனது பெற்றோர்கள் தான். திருமணத்துக்கு பின்பும் எனது கலை ஆர்வத்தை மேலும் மேலும் ஊக்குவித்துவரும் எனது அன்புக் கணவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! மேலும் சிறு வயதில் இருந்தும், இப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் பல கோடி!
பரதம் என்னும் கடலில் இதுவே என் ஆரம்பம்!

எனது ஆற்றுகை தேர்வு 11.April 2020 ஆம் திகதி இடம் பெறும்.
வந்து சிறப்பிக்கும்மாறு அன்புடன் கேட்டுக்கோள்கின்றேன்!

இடம் அறிவிக்கப்படும்.

இப்படிக்கு உங்கள்
பென்சியா