எனது எச்சங்கள் எனும் புலம்பெயர் சிறுகதை01.04.2018 அறிமுகம்

எனது எச்சங்கள் எனும் புலம்பெயர் சிறுகதைத் தொகுதி புலம்பெயர் நாட்டில் தன்னை அறிமுகப்படுத்தி ஓய்ந்துள்ளது.

01.04.2018 அன்று முட்டாள்களின் தினத்தில் இந்த முட்டாளின் நூல் ( அறி+ முகம் )காட்டியது.

தன்னைத்தானே முட்டாளாக நினைப்பதில் தவறொன்றுமில்லை நண்பர்களே….!!

நாளும் நாம் கற்கவேண்டும் ! ….என்றால் அர்த்தம் என்ன? எல்லா மனிதனும் ஏதோவொரு விடையத்தில் முட்டாளாக இருக்கின்றான் என்பதுதானே?
அதனால் „முட்டாள் „என்பதில் அர்த்தங்கள் ஆயிரம்? உண்டு என்கிறது முட்டாளுக்குள் இருக்கும் அறிவு.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த நிகழ்வு விமர்சன உரையில் சூடுபிடித்தது.
எச்சங்களின் வாசகராக மாறுவதற்கு வருகைதந்திருந்த பலரின் உண்ட சோர்வை நீக்கி வயிற்றில் ஜீரணசக்தியை அதிகரிக்கும் அளவிற்கு விமர்சன உரை இருந்தது.

விமர்சனத்துக்கு விமர்சனம் என்றும்,விளக்கம் என்றும் மேடையில் „தமிழ் “ தர்க்கமும் ,வாதமும் தனக்கே சொந்தமென தலைநிமிர்த்திக் காட்டியது.

பாரதி ஓர் இடத்தில் சொன்னது பாழாய்ப்போன நினைவில் வந்து மகிழச்சியைத் தந்தது எனக்கு..☺️

“ எழுத்துலகில் இவன் கத்துக்குட்டி ஆனால் என்னை எல்லோரும் சிங்கமாக கருதி விமர்சிக்கின்றனர் என்பான்“

என் நிலையும் அதுதான்!
எல்லாப்புகழும் என் தமிழுக்கே….??

விமர்சன உரையை செவிமடுத்த சபையினரில் பலர் விசனம் அடைந்தனர்.
இப்படி எப்படி விமர்சனம் பன்னலாம் ?என்றனர் பலர்….
தனிப்பட்ட பகையா ? என்றனர் சிலர்….
திட்டமிட்ட ஏதோ பழிவாங்கள் என்றர்…இன்னும் ஒரு சிலர்
நீ எப்படி சிரித்துக் கொண்டிருந்தாய்? என்றனர் தோழிகள்

விமர்சனம் என்பது ….
எங்கு ? எப்படி ? எதை? யாருக்கு? எந்தச்சூழலில்? பன்னவேண்டுமென திட்டமிட்டு செய்வதாக கருத வேண்டிய அவசியமேயில்லை.

விமர்சனத்துக்கு வரையறை இல்லை.வரம்புக்குள் நின்று விட்டால் தர்க்கம் வளராது
கருத்துக்களும் மோதாது…
புதிய சிந்தனைகள் பிறக்காது…
புதிய உந்துசக்தி உயிர்க்காது….

எழுத்தாளனாக அடியெடுத்து நடக்கும் ஒருவனுக்குள் இவையாவும் உருவாக „இப்படியான விமர்சனம்“ வேண்டும்.
நாடிநரம்புகளை புடைக்க வைப்பதாக அவை இருக்க வேண்டும்!

அப்படியான விமர்சனங்களை பாரதி வரவேற்றான்….
இரசித்தான்…
சிந்தித்தான்….

சொற்களால் புதிய எழுத்துநடையை பாருக்கு பரிசளித்தான்.

விமர்சகர்களை வாழ்த்தினான்…
கொண்டாடினான்…..
என் தமிழுக்கு புதிய முலாம் பூசிய தர்க்க வாதிகளே தங்கள் பாதம் பணிவேன் என்றான்…

அவனை நேசிப்பவள் நான்!!

நானும் மகிழ்ச்சிக் கடலில் குதிக்கிறேன்.
என்றோ ஒரு நாள் என் எழுத்தும் கொண்டாடப்படும் என்பதற்கு மேடையில் வீற்றிருந்தோரின் வெளிப்படையான கருத்துக்களும்,சபையில் கூடியிருந்தோரின் பலதரப்பட்ட விமர்சனங்களும் எனக்குள் உறுதியைத் தந்தது.

சபையில் அமைதி இருந்தால் அது விழா அல்ல .
சபையில் இருப்போர் மேடையேறி பேசுபவர்களின் செய்தியை பூம்,பூம் மாடாக செவிமடுத்துச் சென்றாலும் ஆரோக்கியமான நிகழ்வு அல்ல!

சிந்தையில் கிளறல் வேண்டும்.உதடுகள் துடிக்க வேண்டும்.ஆரோக்கியமான கேள்விகளும் அதற்கான பதில்களும் பரிமாறப்படவேண்டும்.

ஆனால் அதனை மஞ்சள் காமாலைக் கண் கொண்டு பார்க்க கூடாது!
எதையுமே சாதகமாக நினைத்தால் வலியில்லை ஆனால் வழி உண்டு.

நண்பர்களே நலமாக முடிந்த நிகழ்வின் நிழற்படங்களும் ,விமர்சகரான ஊடகவியலாளர் திரு .சன் தவராசா அண்ணாவின் விமர்சன உரையின்
காணொளிக்காட்சியும் …..

தோழமையுடன் வாணமதி