எமது மக்கள் ஊடகம் எஸ். ரீ. எஸ் தமிழ் தொலைக்காட்சி, மிக அழகாக மன்மதன் பாஸ்கி நேர்காணலுக்கு வாழ்த்துக்கள் கு.பரராசா

எங்கே, எப்போ, எது தேவையோ, அங்கே அது அழகாக வழங்கப்படுகிறது. மிகச் சிறந்த பட்டறிவை எம்முடன் பகிர்ந்துகொண்ட எங்கள் தாரகை மன்மதன் பாஸ்கி அவர்களுக்கும், அதற்கு களம் அமைத்துதவிய எமது மக்கள் ஊடகம் எஸ். ரீ. எஸ் தமிழ் தொலைக்காட்சிக்கும், மிக அழகாக நேர்காணலை நடாத்திய, எங்கள் ஊடக ஆய்வாளர் முல்லை மோகன் அவர்களுக்கும், நேரே நடப்பது போல் ஒளிப்பதிவு செய்த தொழில் நுட்பவியலாளர் தேவா அவர்களுக்கும், இவையெல்லாம் தொடர்ந்து, சிற்றாறாக ‚சலசல“த்து ஓடுவதற்கு பேராற்றலாக அமையும் எஸ். ரி. எஸ் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகளும், நன்றியும். நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!