எஸ். சுதாகரன் ரொரன்ரொ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான ருத்தி“ 19,10.29 பிற்பகல் 4.00 மணிக்கு

கனடாவில் உள்ள ரொரன்ரொ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான நிதி சேகரிப்பில் உலகளிவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் குழுவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக பல தனி மனிதர்களும் குழுக்களும் அமைப்புக்களும் தீவிரமாக செயற்பட்டு வரும் இவ்வேளையில், பலர் இந்த நற்காரியத்திற்கு தங்கள் ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.

“ ஒருத்தி“ என்னும் தமிழ்த் திரைப்படத்தை தயாரித்து உலகின் ப லநாடுகளிலும் திரையிட்ட பிஎஸ் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி. எஸ். சுதாகரனின் ஏற்பாட்டில் மேற்படி ரொரன்ரொ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான நிதிககாக அதே „ஒருத்தி“ திரைபபடம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி பிற்பகல் 4.00 மணிக்காட்சியாக றிச்மண்ட்ஹில் நகரில் உள்ள யோர்க் சினிமாவில் திரையிடப்படவுள்ளது.

மேற்படி நற்பணி விடயமான ஊடகவியலாளர்களின் சந்திப்பு ஒன்று கடந்த திங்கட்கிழமை 7ம் திகதி ஸ்காபுறோ நகரில் இடம்பெற்றது.
அதில் பிஎஸ் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி. எஸ். சுதாகரன் மற்றும் ரொரன்ரொ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான நிதி சேகரிப்பில் உலகளிவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் குழுவின் சார்பாக திரு சிவன் இளங்கோவும் ஊடகவியளாளர்களுக்கு விளக்கமளித்தார்கள்.

அனைவரும் இந்த நற்பணிக்கு ஆதரவு வழங்கும் வகையில் 19ம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு யோர்க் சினிமாவிற்குச் சென்ற „ஒருத்தி“ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்து தமிழ் இருக்கை அமையவும் உதவுமாறு அன்புடன் வேண்டிக் கொளகின்றோம்.