ஏனோ..!கவிதை கவிக்குயில் சிவரமணி

 

விலகாத பந்தம்
இருந்தென்ன இலாபம்
விடியாத போது
இருள் எங்கே நீங்கும்

சுவாசப்பையில்
அடைப்பட்ட காற்று
சுற்றி சுற்றி ,மூச்சாகி
அந்தரிக்க வைக்கிறதே

குளிர்கால கம்பளியா
குதிர்ந்தேனோ நானும்
கோடையில் பயனில்லை என்றா
குத்தி கிழித்துவிட்டாய்

காலம் ஒரு சுழற்சி
காதல் அதும் அப்படியா
கண்ணுள் விழுந்த தூசி
கசக்கிஅழுதும் நீங்கவில்லை

ஆகாயக்கல் விழுமென
ஆறுகால பூசை செய்தும்
அரிதாரம் பூசிய உன்னை
அற்புதமாய் எண்ணினேனோ

வலிக்காமல் வலிக்கிறது
கொல்லாமல் கொல்கிறது
உவமைத்தொடர் எல்லாம்
உண்மையானது கண்டேனே
ஏனோ இந்த பிரிவில்…///

ஆக்கம் கவிக்குயில் சிவரமணி