***ஒய்யாரப் பாவைகள் ***கவிதை நிலாநேசன்

தெளிந்த வானிலே தவழ்ந்துதிரிகிறது அங்கே
…..திருட யாருமில்லாத அந்த வெண்ணிலா.
ஒழிந்து கொள்கிறாள் ஆணின்கைகளில் இங்கே
…..ஒருவித-மான பயத்தோடு இந்தப்பெண்ணிலா.
வழிந்தோடும் வடிவழகிலும். வணக்கத்திற்குமந்த
…….வசீகர நிலவும் பெண்ணும் ஒன்றென்பர்.
மலிந்துபோனாளோ மானமுள்ள பெண்ணிங்கு
…..மடையர்களவள் மானத்தைப் பங்குபோட.
ஒளிக்குமந்த ஓயாதநிலவிலேயே களங்கம்-கண்டான்
…..ஓய்யாரப்பாவைகளை களம்-காணாமல் விடுவானா ?
ஆக்கம் நிலாநேசன்