ஓராண்டு நிறைவை எய்திவிட்ட யோகம்மா ஒலிப்பதிவு கலைக்கூடம். 24.06.2021.

24.06.2021. இன்றுடன் ஓராண்டு நிறைவை எய்திவிட்ட யோகம்மா ஒலிப்பதிவு கலைக்கூடம்.இலைமறை காயாக இருக்கும் கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தும்நோக்கில் அவைத்தென்றல் யோகம்மாவானொலி இயக்குனர் சமூக சேவையாளர்திரு.வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின்முழுமையான உதவியுடன் அமைக்கப்பட்டயோகம்மா ஒலிப்பதிவு கலைக்கூடத்தில்பல ஆலயங்களுக்கு பக்தி பாடல்கள்எம்மால் உருவாக பட்டுஉள்ளது..குறிப்பாக வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தில்( 24 )இருபத்துநான்குபாடல்கள் வெளியீடு செய்துள்ளோம்.ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் (சங்கரனை நினை மனமே)என்ற பாடல் ஒலிப்பேழை வெளியீடு செய்தோம். மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் (பத்து பாடல்கள்) வெளியீடுசெய்தோம். இதனை கோபி அண்ணா செய்துள்ளார். மாவை சித்திவிநாயகர் ஆலயத்துக்கு (பத்து பாடல்கள்) செய்துள்ளோம் இன்னும் வெளியீடு செய்யவில்லை.. மிக விரைவில்வெளியீடு செய்வார் எமக்கு ஊக்கமும் ஆக்கமும் தரும் மாவை சிவம் அண்ணா.சுனாமி நினைவு பாடல்கள் (பத்து) செய்துள்ளோம்.. கவிஞர் இனுவைஊர்மயூரன் அவர்கள். பத்துமலை முருகன், நல்லூர் கந்தன், தமிழ் வாழ்த்துபாடல், இளையோர் பாடல், ஊர்களின்அழகு பாடல், என பலவகை பாடல்கள்செய்துள்ளோம். கிளிநொச்சி உதயநகர்பிள்ளையருக்கு (பத்து பாடல்கள்)செய்துள்ளோம் இன்னும் வெளியீடுசெய்யவில்லை. காரணம் கொரோனா.முள்ளியவளை கலியாண வேலவர் ஆலயத்தில்( ஆறு) பாடல்கள் வெளியீடு செய்தோம்…முல்லைத்தீவு சிலாவத்தை காயமோடை பிள்ளையார் ஆலயத்திற்கு (ஆறு) பாடல்கள் செய்துள்ளோம்முள்ளியவளை அந்தோனியார் ஆலயத்தில் (ஐந்து)பாடல்கள் வெளியீடு செய்தோம். முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர்ஆலயத்துக்கு பல பாடல்கள் செய்துள்ளோம்….திருமணம் பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள்செய்தோம்.. பாலம் படைப்பகத்தின்ஆதரவில் எமது பாரம்பரிய கூழ் பாடல்செய்தோம் இன்னும் வெளியீடு செய்யவில்லை…இப்படி பலவிதமானபாடல்கள் செய்வதற்கு எமது யோகம்மாஒலிப்பதிவு கலையகத்தை நாடி வந்தஅத்தனை நல் உள்ளங்களுக்கும்எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்… இதற்குமேலாக இந்த யோகம்மா ஒலிப்பதிவுகலைக்கூடத்தை நிறுவி தந்த அவைத்தென்றல் திரு.வில்லியம் திலகேஸ்வரன் அண்ணாவுக்கும்எனது நெஞ்சார்ந்த நன்றி…. எதிர்காலத்தில் நீங்கள் எமதுயோகம்மா ஒலிப்பதிவு கலைக்கூடத்தைநாடி வரும்போது உங்களுக்கு ஏற்ற வகையில் பாடல்கள்செய்ய முடியும் என நம்பிக்கையை தருகின்றோம் அன்பு சொந்தங்களே.அத்தோடு எமது பாரம்பரிய உணவுகளில்ஒன்றான கூழ் சமைத்து கொடுப்பதைவளமை ஆக்கி உள்ளோம்..மீண்டும் அனைவருக்கும் நன்றியைகூறி அம்மாவின் ஆத்ம சாந்தி பெறபிராத்திக்கின்றோம்…