ஓ.. வெண்ணிலா..

 

வட்டநிலா தொட்டணைத்து தூதுவிட,
மனப்பெட்டகத்தில் உனைச் சுமந்து
எட்டயிருந்து வாடுகிறேன் வெண்ணிலா..

மனம் மொட்டவிழ்ந்த தாமரைபோல
கட்டவிழ்ந்து தாவுகிறது வெண்ணிலா..
உன்னைத் தொட்டுணர எட்டயிருந்து ஏங்கிறது என் நினைவு வெண்ணிலா..

கை தொட்டெழுதும் கவிதைகளைக் காரிருளில் மெட்டமைத்து பாடுமவள் பெண்ணிலா..
உன் ஒளி பட்டுவிட மொட்டும் விடும் என் கவிதை வெண்ணிலா..

வட்டமிடும் தேவதைகள் உன்னில் ஒட்டிக் கொண்டுறவாடலாம் வெண்ணிலா..
பொட்டு இழந்த பூவையும் உன்னை நெற்றியிட ஏங்கிடலாம் வெண்ணிலா..

பட்டு வண்ண பால் நிறத்தில் பவனி வரும் பவளமுக வெண்ணிலா..
உன்னை தொட்டுரசி முகிலினங்கள் ஆசை தீர்க்கும் வெண்ணிலா..

பச்சிளமாய் நானிருக்க பால் சோறூட்டி என்னை ஏமாற்றிய கதை நானறிவேன் வெண்ணிலா..
பாட்டி உன்னிடத்தில் வடை சுட்டதென்று கதையளந்த முன்னோரை நானறியேன் வெண்ணிலா..

கவித்தென்றல்