கடந்த ஞாயிறு…… ‚பெட்டியுள்ள மனிதரெல்லாம்….‘ ஓரங்க நாடகம்

சுதன்ராஐ்  கூறுகின்றார்  எனது நாடகவெளியில் நான் கண்ட மற்றுமொரு ஞாயிறு சுவிஸ் றமணன்.

அற்புதமான நடிகர்,

கடந்த ஞாயிறு இதே நேரம் அவரோடு ‚பெட்டியுள்ளாம் மனிதரெல்லாம்…‘ நாடகத்துக்காக பரபரப்பிருந்த நேரம்.

தற்காலத்தில் சமூகத்தின் மத்தியில் நவீன தொடர்புசாதனங்கள், எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது பற்றியதான ஓர் ஓரங்க நாடகமே ‚பெட்டியுள்ள மனிதரெல்லாம்….‘

இதற்கான கருவையும் அதனோட்டத்தையும் அவரிடம் நான் கையளித்த போது, தனக்கே உரிய ஆளுமையின் வழி அதனை வளர்த்தெடுத்து தனித்து நடிப்பால் அரங்கை கட்டிப்போட்ட ஆளுமையாக றமணன் அண்ணா இருந்தார்.

நெஞ்சார்ந்த நன்றி….

இன்னும் பல மேடைகளில் இந்த ஓரங்க நாடகத்தைக் காணலாம்.

முன்கதை 1 : ரீரீஎன் தொலைக்காட்சியில் ‚படலைக்கு படலை‘ நாடகம் பெருத்த வரவேற்போடு இருந்த காலம். இன்னுமொரு படைப்பாக தொலைக்காட்சி தொடர் ஒன்றினை தொடங்குவோம் என்ற முனைப்பில் எனது ஆசான் ஏ.சி.தாசீசியஸ் கைகாட்டிய நடிகர் : சுவிஸ் றமணன்.

அவரோடு தொடர் பற்றிய உரையாடல்…. சில காரணங்களால் அத்தொடரை தொடங்க முடியவில்லை.

முன்கதை 2 : நாடகர் பாலகணேசனின் ‚நான் ஒரு கரப்பான் பூச்சி‘ ஓரங்க நாடகத்தில் றமணின் நடிப்பினை பார்த்து வியந்திருந்தவன். இவரோடு பணியாற்ற வேண்டும் என்ற பெருவிருப்பம் குடிகொண்ட நாடகம் அது.

அன்ரன் பொன்ராஜா, பாலகணேசன் போன்ற நாடக ஆளுமைகளுடன் பணியாற்றிய ஒரு கலைஞனோடு எப்படி அணுகுவது…எந்த எண்ணத்துடன் அணுகுவது…யோசனை.

அப்படி இருக்கும் போது….எனக்குள் தோன்றிய எண்ணக்கருவை சுவிசில் வைத்து ஐ.பி.சி தமிழா நிகழ்வில் கூறினேன். ஓம் செய்யலாம் என்ற பதில்.

அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தது பிரான்ஸ் ஒளிவிழா நிகழ்வு. நன்றி தயாநிதி அண்ணா, பரா அண்ணா.

பின்கதை : ‚பெட்டியுள்ள மனிதரெல்லாம்‘ நாடகத்துக்கு முன்னராக ‚அரங்கமும் அதிர்வும்‘ நிகழ்வில் எனதுரையில் ‚ ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூக-அரசியல் அக்கறை, அதில் அவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து காரசாரமாகவே குறித்திருந்தேன்.

பின்னராக இந்த நாடகம், அச்சொல்லின் செயலாக சமூக-அரசியலை வெளிப்படுத்தியது.
இதுவே படைப்பின் – படைப்பாளியின் அறம்.

நன்றி றமணா அண்ணா….அடுத்த மேடையில் சந்திப்போம்.