கடலோரக்காதல்!கவிதை நகுலா சிவநாதன்

கடலோரக்காதல் கனமாய் மனதை தொட்டது
இதழோரம் இனிமை தர இதமாய் உனைத்தேடியது
நிலவாய் நீ தந்த பரிசம் நிதம் உனை அணைக்க
நித்தியக் காதல் பனிமழையாய் பொழிந்ததே!

அலையோடு உன் அணைப்பும் அகத்தோடு
குளிர் நிலவும் அலைமோதக் கனவுகள் துளிர்த்ததே!
நினைவுகள் நெஞ்சில் நிழலாட நிதம் வரும் கதிரவனாய்
நெஞ்சில் திரையாக ஆசை முட்டி மோதுகிறதே!

கடலோரக்காதல் தென்றலே கனமான முழுநிலவுப்பூவே
உடலோரம் உரசிச்செல்லும் சூறைக்காற்றே
உளமார உன் நினைவு உடலோடு உறைந்து
கனமாக காதல் மழையாய் கசிவாய்ச் சாரலாகுதே!

புனிதமான காதலுக்கு புது அர்த்தம் வைத்தவனே!
மனிதத்தின் மாண்பிற்கு மகிழ வைக்கும் பெட்டகமே
துன்பத்தை துரத்தி துடுப்போடு பயணிக்கும் இன்பக்காதல்
இறக்கும் வரை உன்னோடு இனிமையின் வசந்தமே!

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்