கந்தபுராண எழுச்சி விழாவின் பத்தாம் நாள் வைபவம்

நல்லூா் ஆதீனத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் கந்தபுராண எழுச்சி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வுகள் திணைக்கள உதவிப் பணிப்பாளா் திரு. இ.கர்ஜின் அவர்களின் தலைமையில் இன்று மாலை (06.08.2017) நடைபெற்றன.
.
விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண போக்குவரத்து  வர்த்தக வாணிபம்,கிராம அபிவிருத்திஇ வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் .சி.சத்தியசீலன் கலந்து கொண்டார்.

வரவேற்புரையை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். உதயபாலனும் தொகுப்புரையை அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவமணியும் வழங்கினர் .இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ பரமேஸ்வர. மனோகரக் குருக்களின் ஆசியுரையும்.அறிநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கந்தபுராணம் தொடா்பான சிறப்புரையை உதித்தனன் உலகமுய்ய என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர்இ செந்தமிழ்ச் சொல்லருவி லலீசன் அவர்கள் ஆற்றினார்.சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினர் வழங்கிய பக்தி கானங்கள் இறுதியாக இடம்பெற்றது.

சிறப்புப் பேச்சாளரின் பேச்சுத் தொடர்பாக புதிர்ப; போட்டி நடத்தப்பட்டு மாணவர்களிற்கு பெறுமதியான நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.செந்தூரன் நன்றியுரை நல்கினார்.

Merken