கனடாவில் எதிர்வரும் 9ம் திகதி திரையிடப்படவுள்ள வாண்டு‘ திரைப்படம்

கனடாவில் எதிர்வரும் 9ம் திகதி சனிக்கிழமை திரையிடப்படவுள்ள ‚வாண்டு‘ திரைப்படத்தை கண்டு களிக்க பலர் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.
வாண்டு‘ திரைப்படத்தின் கதாநாயகன் குணா அவர்கள் தற்போது கனடாவில் இந்த திரைப்படத்தை திரையிடுவதில் பல நண்பர்களோடு இணைந்து மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, கனடா வாழ் வர்த்தக அன்பர்கள் பலர் இந்த திரைப்படக் காட்சிக்கு தங்கள் ஆதரவையும் அன்பளிப்புக்களையும் வழங்கியுள்ளார்கள். பலர் இனிவரும் நாட்களில் தங்கள் ஆதரவை தருவதற்கு முன்வந்துள்ள்ளார்கள்.
அந்த வகையில் இன்று வாண்டு‘ திரைப்படத்தின் கதாநாயகன் குணா அவர்களிடமிருந்து நேரடியாக திரைப்படத்தின் அனுமதிச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு தங்கள் அன்பளிப்புக்களையும் வழங்கினார்கள்;
அவர்களில் வர்த்தகப் பிரமுகர் சங்கர் நல்லதம்பி,நிமால் வினாயகமூர்த்தி(கணக்காளர்) திரு ஜேய் ( Jay’s Truck Training ) மார்க்கம் வாழ் வர்த்தகப் பிரமுகர் ரூபன்-சுஜி மற்றும் அவர்கள் புதல்வி ஜஸ்மிதா, கிறிஸ் சிவக்கொழுந்து (Majestic City Tamil Shopping Mall ) ராஜா (பங்காளர் The Estate Banquet Hall )ரூபன் ( JRS College of Technology ) அரி அரன் (கணக்காளர்) ஜோசப் (கிராமத்து விருந்து) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இங்கே காணப்படும் படங்களில் அவர்கள் அனைவரும் வாண்டு‘ திரைப்படத்தின் கதாநாயகன் குணாவோடு நிற்பதைக் காணலாம்.