கனடாவில் புகழ்பெற்ற „இசைச்சாரல்“ இசைக்குழுவும் கனடாவாழ் இசை ரசிகர்களின் ஆதரவோடுமுடிந்தது

இசைப் பயிற்சி நிறுவனமாகத் திகழும் „பைரவி இசைக் கல்லூரியும் அதன் கீழ் இயங்கும் „இசைச்சாரல்“ இசைக்குழுவும் கனடாவாழ் இசை ரசிகர்களின் ஆதரவோடு நடத்திய வாத்திய இசைப் போட்டியை மிகவும் நேர்த்தியாக நடத்தி முடிந்துள்ளார்கள் ஆசிரியர் ஜெயச்சந்திரன் அவர்களுடைய குழுவினரும், அவரும்.

கடந்த 2ம் திகதி கனடா கந்தசாமி ஆலயத்தில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றால் கடந்த சில வாரங்களாக முதல்சுற்றுப் போடடி இரண்டாம் சுற்றுப் போட்டி மூன்றாம் சுற்றுப்போட்டி என பல மட்டங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கடந்த காலங்களில் பாடல் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் இவ்வாண்டு கீ-போர்ட் வாத்தியக் கருவிகள் இசைக்கும் ஆற்றலுக்கே பரிசுகள் வழங்கப்பெற்றன.

இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை 2ம் திகதி கனடா கந்தசாமி ஆலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது. போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவியர் மற்றும் இசை ஆர்வலர்கள் பெற்றோர்கள் நண்பர்கள் வர்த்தகப் பெருமக்கள் என மண்டபம் நிறைந்த வகையில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

இறுதிச் சுற்றுப்போட்டிக்கு இசையமைப்பாளர் சி. சுதர்சன், டாக்டர் வரகுணன்,மற்றும் வாத்தி;யக் கலைஞர் எம். சுரெஷ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் 23 பேர் பங்குபற்றினர்.

கனடாவில் நன்கு அறிமுகமாக பாடக பாடகிகள் போட்டியில் பங்குபற்றிய கீ-போர்ட் வாத்திய மாணவ மாணவிகளோடு இணைந்து பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

போட்டிகளின் இறுதியில் நடுவர்களின் கணிப்பின் படி முதலாவது பரிசான 500 டாலர்களை செல்வி சரண்யா பத்மகாந்தனும், இரண்டாவது பரிசான 350 டாலர்களை செல்வி தீபினி தவகுமாரும், மூன்றாவது பரிசான 250 டாலர்களை செல்வி பவித்ரா ஈஸ்வரகுமாரனும் தட்டிக்கொண்டார்கள். அனைவரும் ஒன்றாகக் கூடி மூன்;று வெற்றியாளர்களையும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.