கனடாவில் ஸ்வராலயம் நுண்கலைக் கல்லூரியின் 3வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ஸ்வராலயம் நுண்கலைக் கல்லூரியின் 3வது ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறொவில் அமைந்துள்ள ஒன்றாரியோ இசைக் கலா மன்ற கலாமன்றத்தின் அரங்கில் நடைபெற்றது.

திருமதி உசா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஸ்வராலயம் நுண்கலைக் கல்லூரியின் நிறுவனரும் வயலின் மற்றும் வாய்ப்பாட்டு துறைகளின் குருவுமாகிய திருமதி மேகலாதேவி விஜயகுமார் மற்றும் அவரது கணவர் பிள்ளைகள் அத்துடன் இசை பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் ஆகியோரின் ஓத்துழைப்புடன் விழாவை சிறப்பாக நடததினார்.

தங்கள் திறமைகளை மேடையில் சபையோருக்கு சமர்ப்பித்த மாணவ மாணவிகளின் ஆற்றல் நன்கு புலப்பட்ட ஒரு ஆண்டு விழாவாகவே அன்றைய மாலைப்பொழுது அமைந்தது.
பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அங்கு உரையாற்றிய உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்;கம் தனது உரையில் கர்நாடக சங்கீதம் என்பது பொறியியல் துறை போன்ற மிகவும் கடினமான ஒரு துறை என்றும் ஒரு அறைக்குள் இருந்து சங்கீதத்தையோ அன்றி வாத்தி;யக் கருவி ஒன்றையோ கற்றுக்கொள்கின்ற மாணவ மாணவிகள் ஒரு காலத்தில் ஆயிரம் இசை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் ஒரு மண்டபத்தில் கச்சேரி செய்யும் அளவிற்கு உயரவேண்டும் என்றும் 
ஸ்வராலயம் நுண்கலைக் கல்லூரியின் நிறுவனரும் வயலின் மற்றும் வாய்ப்பாட்டு துறைகளின் குருவுமாகிய திருமதி மேகலாதேவி விஜயகுமார் தனது மாணவச் செல்வங்களுக்கு தகுந்த முறையில் கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக் கொடுத்துள்ளார் என்பதற்கு சான்றாக இன்றைய விழா அமைந்துள்ளது என்றும் பாராட்டுத் தெரிவித்தார்.