கனவின் புது வசந்தம்!ஆக்கம் சுதர்சன் மட்டு நகர்கவிதை சுதர்சன் மட்டு நகர்

 

கரு விழிகளிலே
கரு மை தீட்டி
சிங்கார நடை போட்டு
கிராம வாசனையுடன்
எனை தேடும்
தேவதையே
நீ அறியாயோ
உனக்குள் ஓடும்
நரம்பில் குருதியாய்
உள்ளேன் என்று

உன் அசைவுகள்
எல்லாம் ரசிக்க
வைத்து
புன் முறுவலூட்டி
எனை வெறுப்பேற்றும்
உன் லீலைகள்
நான் அறியேன் என
நினைத்தாயோ

வாங்கி வந்த ஒரு பிடியில்
மூன்றில்
இரண்டை எனக்கு வைத்து
ஒரு பங்கை
உண்ண மனமின்றி
தவிப்பதை அறிவேனடி
பூ விழியே
தாயைப்போல்
நீயும் என்று

என் பாத தடத்தில்
உன் சுவடு வைத்து
தடுக்கி விழும் போடு
காலில் வரும்
சிராய்வுகள் கூறும்
உன்னோடு
நான் இருப்பதை

உனக்காக நான்
இழக்கவில்லை
நீயோ இழந்தவை
கோடான
கோடியடி எனக்காக

இடையில் நான்
வரவில்லை
உன் பிறப்பிலிருந்து
அறிவேன் உனை
ஏனடி மானே
நாணம் கொண்டு
மறைக்கிறாய்
முகத்தை
ஓ! இது
உன் இனத்தின்
அடையாளமோ?

தலை சீவி
சிங்காரிக்கும்
அழகு பிடிக்கவில்லை
கலைந்த
கருங்கூந்தலில்
தெரியுதடி
ஆயிரம் கோலங்கள்
அரிசி மாவு எதற்கு
கோலமிட
உன் கூந்தலை
கலைத்து விடு
ஆயிரம் ஓவியங்கள்
வரையாமல்
காட்டி விடும்

ஐயகோ இது
கனவில் கண்ட
விம்பங்களா
இல்லை வரும்
வசந்த அறி குறியா??

ஆக்கம்  சுதர்சன் மட்டு நகர்

Merken