கலங்காதே மனமே !

கலங்காதே மனமே கவலைகள் உனக்கு
விலங்காக வாழ்வில் சிறையிருந்தாலும்
வறுமையே உனை வாட்டி வதைத்தாலும்
பொறுமையாய் இருந்திடு பெருமையே பேசிடு

பெற்றவரை இழந்த சோகம் வாட்டினாலும்
பிறப்பின் பயன் அனுபவித்தே ஆகணும்
கடினப்பட்டு உழைத்தாலும் நம்பிக்கை தளராதே!
நாளைய வெற்றி உன் கையில்தான்சிறுவயது வாழ்வு

சிகரம் தொட முனைந்தாலும்
நம்பிக்கையின் பலங்கள் வெற்றியைத் தந்திடும்
முயற்சியின் கீற்றுகள் வளர்ச்சியை தரும்
வருங்காலம் இதுவல்ல உயர்வதற்கு முழுப்பலம்

சோதனைகள் போராட்டங்கள் தொடர்கதையாய் வந்திடும்
வாழ்க்கையின் வண்ணமே உன் கையில் தம்பி
போராட்ட வாழ்விலும் நீரோட்டமாக வாழ
பொழுதுகளை வென்றிட்டு வாழ முனை

வருங்காலம் உன் முன்னே வளமாகக் கிடக்குது
கல்லுடைக்கும் மனம் கணணியையும் தொடும்
வில்பிடித்து அம்பெய்தான் இராமன்
விளக்காக ஒளிரும் மின்விளக்கும் வறுமையின் பிறப்பே!

கலங்காதே மனமே கவலைகள் திவலையாகும்
உரமாக மனதை உறுதுணையாக்கு உலகம் உன்னிடம்
வரமாக உனக்கு கிடைத்தது வாழ்க்கை
வசந்தமாக்கிட எழுந்திடு நாளை உன் கையில் உருளுமுலகு
நகுலா சிவநாதன்