*****கல் மனிதா *****

வாய-சைத்து விட்டதும்
வார்த்தைகள் வருவதால் ,
வரும் வார்த்தைகள் எல்லாம்
வல்ல தேவாரங்கள் ஆகிடாது.
*
காய-ப்படுத்தி விடுகின்ற
கடும் வார்த்தைகள் எல்லாம்
கணக்கில் தவிர்க்கவேண்டிய
கண்டன தூஷணங்களே !
*
நேய-ப்பட்ட இதயங்களை
நாம் ,ஒருசில சொல்லால்
நோகப் பண்ணிவிடுவதும்
நடைமுறையில் கொலையே ,
*
தாய-க்கட்டை போல, நாம்
தருப்போகும் சொல் எதுவெனத்
தெரியாத தருணங்களும்
தண்டனையாகும் மற்றவனுக்கு.
*
மாய- வேலை செய்து மற்றவரை
மாய்க்கும் மந்திரவித்தையை விட
மதிப்பற்ற வாய்ச்சொற்களே
மனிதவாழ்வை மாசுபடுத்தும்.
*
தூய-உள்ளம் என்பதைத்,
தேடிப்பிடிப்பது கடினமாம்.
தயவான உன் வார்த்தைகளின்
தன்மை கூறிடுமே, உன் தரத்தை.
*
காயப்படுத்தி இதயங்களின்
கண்ணீரை சம்பாதிக்காதே
காயமின்றி வாயால் கொல்லும்
கல்மனிதனாய் தலைகுனியாதே!!
****
மரியாதை நேசன்.