களனிப் பல்கலைக்கழக மாணவர்களது அர்ப்பணிப்பில் கருக்கொண்ட மதுகை.

களனிப் பல்கலைக்கழக மாணவர்களது அர்ப்பணிப்பில் கருக்கொண்ட மதுகை…
1983இல் தமிழ்த்துறையும், தமிழ் மூலமான கற்கைகளும் நிறுத்தப்பட்ட பின், களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஆண்டு ‚களனியின் சாரல்‘ எனும் சஞ்சிகையினை வெளியிட்டிருந்தனர். இந்த வருடம், இரண்டாவது இதழையும் அதனோடிணைந்து, கலை கலாசார நிகழ்வுகளையும் நடாத்தியிருந்தனர். ‚மதுகை‘ எனும் தமிழ்ப் பெயரினைச் சூட்டி சிறப்புற நிகழ்வை ஒப்பேற்றியிருந்தனர். மிகக் குறைந்தளவு தமிழ் மாணவர்களால் மிகப் பெரிய நிகழ்வு எதுவித குறையுமின்றி நடந்தேறியமை சபையோரை வியப்பில் ஆழ்த்தியது. ‚களனியின் சாரல்‘ எனும் சஞ்சிகை காத்திரமானதொரு படைப்பாக இவ்வருடம் வெளிவருவதும் மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழைக் களினியில் மீட்டெடுக்கத் துடிக்கும் மாணவர்களுடன், ஒரு விரிவுரையாளனாக, தோழனாக அடியேனும் பயணிப்பது நான் பெற்ற பாக்கியமே…