கவிஞர் தயாநிதி (கிருஷ்ணா கந்தசாமி. பிரான்ஸ். கம்பீரக் குரலோன்)..பற்றி!


அறிவிப்பாளன் என்ற எல்லைகளைக் கடந்தவன்.இவனுக்குள் ஆற்றல்கள் பல ரகம்.காட்டிக் கொண்டு வாழாத தன் அடக்க மனசுக் காரன்.கிளிநொச்சி திருவையாற்றில் திரு கந்தசாமி சரஸ்வதி தம்பதிகளின் கடைசிப்பிள்ளை இவன். தந்தையார் ஏனைய நான்கு சகோதரர்களையும் போர் தின்று ஏப்பம் விட்ட பெரும் கதை ஆறாத இரணங்கள்.வலிகளின் கூட்டில் விளைந்த பிள்ளை இவன்.
கிளி.திருவையாறு மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரணம் வரை கல்வியைத் தொடர்ந்து உயர்தரம் கிளி.இந்துக் கல்லூரியில் முடித்து யாழ் பல் கலைக் கழகத்தில் sports science 2003 இல் கற்று இந்தியா கேரளா திருவாந்திரபுரத்தில் விஷேட பயிற்சியாளருக்கான பயிற்சியை 2007 இல் முடித்து இலங்கைக் கான பயிற்சியாளராகத் திரும்புகின்றான். இலங்கை கால் பந்து நடுவர் c கிரேற். வலைப் பந்து பயிற்சியாளர் cகிரேற் எனும் தகுதிகளோடு நின்று விடவில்லை. தற்காப்புக் கலையான கராத்தே கறுப்புப் பட்டி 01.acadamy of original marcial arts கறுப்புப் பட்டி02. Shotkan karate -do international fédération Sri-Lanka கராத்தே சார்ந்த முக்கிய பல செயலமர்வுகளிலும் பங்கு பற்றிய சிறப்புகளுண்டு.
அகில இலங்கை கராத்தே போட்டிகள் 2003.2004 பங்கு பற்றி விருதுகளை தனதாக்கிக் கொண்டவர் தான் இன்றைய அறிவிப்பாளன் அன்றைய கிருஷ்ணா.
மேயர் ஈழப்பிரியா ஞாபகார்த்தமாகத் தமிழீழ தேசிய கராத்தே போட்டிகள் அத்தனையிலும் பங்கு பற்றியவர்.பின்னர் தமிழீழம் கலைச் சம்மேளனத்தின் போட்டிகளில் நடுவராகவும் கூடவே விடுதலை வீரர்கள் உட்பட 200 மாணவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுனராகவும் இருந்திருக்கின்றார். துருவித் துருவிக் கேட்ட போது மெல்ல மெல்ல ஆதரங்களைக் காட்டிய படி பெருமை கொள்ளாது உரையாடினார்.
தமிழீழத் தேசி கால் பந்து போட்டிகளுகளுக்கு பிரதான நடுவராகவும் செயல் பட்டதை நிமிர்வோடு கூறினார்.
எமது பாரம் பரிய விளையாட்டான கிளித்தட்டு. இதுக்கான விதி முறைகள் அடங்கிய நூல் ஒன்றினை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது போரனர்த்தம் தடையாக்கி விட்டதனை வலியோடு பகிர்ந்தார்.
இவற்றையும் தாண்டி கலைத்துறையில் பாடசாலைக் காலங்களில் காத்தவராயன் சிந்து நடைக் கூத்து.பவளக்கொடி.பண்டாரவன்னியன்.கர்ணண். போன்ற வரலாற்று நாடகங்களில் நடித்ததோடு வில்லிசையிலும் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். காலத் தேவைகளுக்கான பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார்…இவரது நெறியாளுகையில் அன்பு எனும் நாடகம் அகில இலங்கை ரீதியில் போட்டியில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கின்றது. நிறை குடங்கள் தளம்புவதில்லை என்பதனை கிருஷ்ணாவில் கண்டு கொள்ள முடிந்தது.புலம் பெயர்ந்து வந்த பின்னால் விடுதலை சார்ந்த முன்னெடுப்புக்கள். மாவீரர் அரங்குகளில் அறிவிப்பாளனாக ஆரம்பித்த கிருஷ்ணா இன்று ஐரோப்பாவில் பல கலை அரங்குகளுக்கு அழைக்கப் பட்டு அசத்தி வருவது இவரது அயராத முயற்சியின் அறுவடையே…கடந்த ஆண்டு யேர்மனியில் நடை பெற்ற வணக்கம் ஐரோப்பா நிகழ்வுக்கு நாமும் சென்ற போது கிருஷ்ணா வோடு பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்த பொழுதில் நாம் பகிர்ந்து கொண்ட பல விடயங்கள் இன்று எனக்கு பேருதவியாகின்றது…இவரது பயணங்கள் சிறக்க வேணாடும்…நாடகங்களையும் தயாரிக்க வேண்டும். அழிந்து கொண்டு போகும் வில்லிசையை மீண்டும் தளைக்க வைத்தல் வேண்டும். கிளித்தட்டு விளையாட்டுக்கான நூலை எழுதி முடித்து ஆவணமயப் படுத்தல் வேண்டும் எனும் அன்புக் கோரிக்கைகளை கிருஷ்ணாவிடம் ஒப்படைத்து இவர் பற்றி அறியாத பல பக்கங்களை புரட்டிய இனிய தருணத்தோடு வாருங்கள் வாழ்த்துவோம் கிருஷ்ணா வாழிய வாழியவே……
2.01.2018.கவிஞர் தயாநிதி