காசு பணம் !ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ்கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

காசு விசிரென்று போகும்
பாசம் உயிரினில் அமர்ந்து விடும்
பணம் தேடிச்சென்றவர் குணத்தை தொலைத்தார்
குணம் தேடிசென்றவர் பணத்தை இழந்தார்
பணத்தாசை கொண்டவர் பிணமாக வாழ்வார்
படித்த மேதையானாலும் பணமின்றிபோனால்
மதிப்பார் யாருமில்லை
படிக்காதவன் பணம் கொண்டு போனால்
அவனையே கடவுள் என்பார்
இந்த சமுகம்
பணமே உலகமென்றோர் பிணமானார்கள்
குணமே வாழ்வு என்றோர்களெல்லாம்
புனிதனானார்கள்

வாகனம் வங்களா என்று வாழ்பவர்
வாசலின் முற்றங்களில் கடன்காரர்கள் வருகை தெரியும்
மனம் கொண்டு வாழ்தல்
மகிழ்வைத்தரும்
சினம் கொண்டு வாழ்தல் அழிவைத்தரும்
தானம் செய்து வாழ்ந்தால்
தூயவராய் வணங்குவார்
மானம் காக்க உயிர் கொடுத்தால்
மாகத்தார் என்பார்

ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ்