„காதலின் மூச்சு காதலர் மனங்கள் ஒவ்வொன்றிலும்“

இன்றோ! நாளையோ!
வீரமரணம் வரலாம்
„உயிரோடு இருந்தால் 
சந்திப்போம்“ என்ற
வார்த்தைக்குள் பதிலுரைக்க
முடியா ஏக்கங்கள் ,
எத்தனை வலிகள் ஆயினும்
தன் தேசத்தில் நிம்மதியாய் காதல் செய்ய வேண்டும் என்பதே கனவு,

„இங்கே காமத்திற்கு இடமில்லை“

காதல் புன்னகையை தோண்டிப்புதைத்த மறுகணமே
தாய் மண்ணை அள்ளி
அணைக்கும் சந்தோசம் அளப்பரியது,

பெருங்களத்தில் நினைவு வரும் போதெல்லாம் நிழல்படங்கள்
மட்டுமே ஆறுதல், இல்லையெனில்
கடிதத்தில் இடப்பட்ட முத்தம், அது பேரானந்தம்,

எதிர்காலம் ஒன்றை நோக்கி
ஓடிய வீரங்கள் வலிகளை மட்டும் 
வாழ்க்கையாய் வைத்திருப்பது
மிகப்பெரும் அவலம் தான்,
ஆயினும்
வீரத்தை அதிகமாக நம்பிய விவேகம் என்றும் ஓய்வதில்லை,
தோல்வியின் பதுங்கு குழியில் 
இருந்தாலும் விடுதலை வெளிக்கு
ஒருநாள் வருவோம் என்ற நம்பிக்கை வாசனை எப்போதும்
எம் தாக உணர்வணுக்களில்.

தே,பிரியன்