***காதல் உலா ***

கட்டைக் கால்சட்டையோடு
காதலன் நானும் ,
காற்றோட்டமான ஆடையோடு
காதலி அவளும் ,
கடற்கரை மணலில்
கால் பதித்திருந்தோம் .
காதலியை கைபிடித்து
கடற்கரை மணலில்
காலாறும் களிப்பே தனி .
காணும் காட்சிகள் எல்லாம்
கற்சிலையானது மனங்களில் .
கடலை சுண்டல் ,குளிர்களி
காரவடை மெதுவடையென ,
கள்ளத்தீனிகள் வயிற்ரை நிறைக்க,
கண்ணுக்கெட்டாத தூரத்தில்
காயும் அந்த
காதல் நிலா எமது
கண்களை நிறைக்க,
கடலலையின் ஓசை
கனிவாய் இசைத்து
காதுகளை நிறைக்க,
கட்டு மீறி வேட்கையோடு
கடல் தாண்டி வரும்
கன்னியலை எமைத்தேடி
கரைதாண்டி வந்து
கால்களை நனைக்க .
கரை நண்டுகள் வந்து
காலால் சுரண்டுவதும்,
காதலன் அதை கையால் பிடித்து
காதலி மேல் விடுவதும் ,
களிப்போடு கூடிய நல்ல
காதல் விளையாட்டானது அங்கே .
கடமையில் கண்ணும்
கருத்துமாய் அங்கே
கட்டிபிடி வைத்தியத்தை
கரிசனையோடு கடமையாற்றிக்
களித்திருந்த காதலர்கள் என்
கண்ணில் படவில்லையென்று நான்
கதையளக்க மாட்டேன் .
கதகதப்பாக கைகளை இறுக்கப்க்கப்பற்றி
கண்களால் என்னை சிறைப்பிடித்த
காதலியின் அருகாமை தந்த
காதல் சுகம் மனதை நிறைக்க,
காதலியோடு கடற்கரை நிலா உலா
களங்கமற்று கடையேறியது .
கடற்கரைநேசன்