காலத்தின் எச்சரிக்கை .

காலத்தின் எச்சரிக்கை .
இயற்கையை அணைத்து
இறைவனை நினைத்து
இதயத்தால் வாழ்ந்த
இனிய மனதன்
இறந்து விட்டான்.
மண்ணைத் தாயாய்
மரத்தை சேயாய்
தண்ணீர் உறவாய்
தரணியை உயிராய்
மதித்த மனிதன்
மறைந்து விட்டான்.
விண்தான் கூரை
விடியல் சேர
மண்ணைக் கொத்தி
மானுடம் காத்தான்.
பிந்தைய மனிதன்
பிளவினை செய்தான்
விந்தையாய் நிலத்தின்
வீரியம் குறைத்தான்
இயற்கைக்கு எதிராய்
இரசாயனப் சேர்த்தான்
இரட்டிப்பாய் விளைய
புதுமுறை தேர்ந்தான்
ஆயுளைக் குறைத்தான்
ஆற்றினை நிறைந்தான்
காடுகள் அழித்தான்
மாடிகள் கொடுத்தான்.
குளிறரை நம்பி
குடிகளாய் நின்ற
மரங்களை வெட்டி
மரணத்தை ஏற்றான்.
காடுகள் இல்லை
களனியும் இல்லை.
ஆறுகள் வற்றி
அருந்த நீரில்லை.
வெப்பமும் கூடி
வியர்வையால் வாடி
நிற்குதே மனிதன்
இனி இங்கு நரகம்.
கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்