காலம் மாறிப்போச்சு

கண்களால் ஒருமுறை
கண்டதும் இருவரும்
காதல் கொண்டுமே,
கண்ணடித்து முதலில்,
கவிதைகள் பல வடித்து
கடிதம் கொடுத்து பின்னர்,
காத்து எங்கிக் கிடந்து
கட்டியணைத்து முத்தமிட்டு
காடுமேடுகள் என்றும்
கடற்கரையென்றும்
கண்மூடி அலைந்து ,
காதலில் மூழ்கி
கலவியில் இணைந்து
கலந்த உறவினால்,
கர்ப்பம் அடைந்து ,பின்
காய் வெட்டி விட்டு
களங்கங்கள் பட்டு
கரையேறாதது ஒரு பகுதியும்.
காதலைப் பிரித்திட
கண்ணீரோடு பாதியும்
கனவோடு மீதியுமாய்
காத்திருந்தோர் ஒரு பகுதியும்,
காதலுக்காக உயிரையே
காணிக்கை அளித்து
கதையாகி இன்றும்
காவியமாக நிலைப்போரும்,
கட்டுப்பாடோடு இருந்து,
கலியானத்தில் முடிந்து
காலம் கழித்தோர் மீதியுமாகவே
காலாதி காலமாக எமது
காதல்கள் நடந்தது …,இன்றோ
காலம் மாறிப்போகவே
கணனியிலே அறிமுகமாம்
கதைத்துப் பேசிய பின்னரே,,
காதல் அங்கே பிறக்குமாம்,
காணவேண்டுமென இருவரும்
கண்டபடி அலைவதுமில்லை,
காணக் கிடைத்தாலுமோ
கட்டுமீறுவதுமில்லை இலகுவில்..
காதலர்கள் சந்திப்பு இன்று
கவுரவமான ஓன்று கூடலாச்சு.
கண்டபடி இணைத்து வைக்கும்
கணனித் தளங்களில் இடும்
காரணமற்ற குறுந்தகவல்களுக்கு
கரிசனையோடு பதில் போடுவதே
காதலர்களின் இன்றைய
களியாட்டமாகி விட்டது.
கதைத்துப் பேசியவரையே
கலியாணம் முடிக்க விரும்பின்,
கண்ணியம் ஏதுமின்றி
கவலையுமின்றி பெற்றோரிடம்
காதலரை அறிமுகம் செய்துமே.
கலியாணம் பற்றி தெரிவிக்கும்
காலம் ஆகிப் போச்சு.
காணாமல் போய்விட்டதே எம்
காதல் லீலைகள் இன்று

கணனி நேசன்