கிராமத்து இதயம் கவிதை கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்

மல்லு வேட்டி மடிச்சு கட்டி
மாடு ரெண்டும் வண்டியில் பூட்டி
காடுகளை கடந்து வருவான் – உழவன்
நாடு வளர பாடுபடுவான்.
வஞ்சனை சொல்வதில்லை
வா துகள் புரிவதில்லை
நெஞ்சிலே கருமையை வைத்து – அவன்
நித்தமும் சிரிப்பதுமில்லை
உழைப்பின்றி திரிவதில்லை
ஊராரை ஏய்ப்பதில்லை
விளை நிலத்தை விட்டொதுங்கி – அவன்
விவகாரம் புரிவதுமில்லை.
கலப்படம் செய்வதில்லை
கண்ணியம் தவிர்ப்பதில்லை
தலைப்படும் செய்கையெல்லாம் -அவன்
தர மது குறைப்பதுமில்லை
வெறித்தனம் கொள்வதில்லை
வேடிக்கை செய்கை இல்லை
நரித்தனம் புரிந்தவனாகி – அவன்
நண்பரைக் கெடுப்பது பில்லை.