குழந்தை…..


பிறக்கும் வரை
எனக்கு சொந்தம்.
தவழும் பொது
உங்களுக்கு சொந்தம்..
பார்த்து பார்த்து
வார்த்தெடுப்பதும்
உருத்துடன் வளரப்பதும்
நீங்கள் தான்…
விமர்சனமெனும்
புட்டிப்பாலின்
ஊட்டச்சத்தில்
குழந்தை நிமிரும்…
குழந்தை
உங்களோடு பேசும்.
உங்களை
அழவைக்கும்
சிரிக்கவும் சிந்திக்கவும்
வைத்திடும்..
பேச்சும் வாங்கும்..
சில
குளங்களில்
தாமரை தாழ
அல்லிப்பூக்கள்
ஆர்ப்பரிக்கும்…
மனத்தளங்களில்
தாமரையில்
தண்ணீர் போல்
ஒட்டாமல் கண்ணீர் வடிக்கும்.
ஆக்கம் கலஞர் தயாநிதி கவிறுஞர்
வேர்களின்
குமுறல்
அறியாமலே
கிளைகளும்
கும்மியடிக்கும்..
தேடல்களின்
அறுவடைகள்
ஊடலுக்கும் கூடலுக்கும்
ஆடலுக்கும் பாடலுக்கும்
எழுச்சிக்கும் புரட்சிக்கும்
விடுதலைக்கும்
பலம் சேர்க்கும்..
கவிதையும்
குழந்தையும்
ஒன்றுதான். அதனை
நடக்க வைப்பதும்
சிறக்க வைப்பதும்
இறக்க வைப்பதும்
நீங்கள் தான்…
ஆக்கம் கவிஞர் தயநிதி