கு.பரா அவர்களுக்கு பிரான்ஸில் 3 விழாக்களில் பாராட்டுகள்!!

இசையும் நாடகமும் இவரது இருகண்கள்!!பண்பாளன்,பகுத்தறிவாளன்,பல்கலைஞானன்,
கு.பரா அவர்களுக்கு பிரான்ஸில் நடைபெற்ற
3 விழாக்களில் பாராட்டுகள்!!
பிரான்ஸ் கலை பண்பாடு கழகத்தினூடக நீண்ட கால தேசத் தொண்டர்!

எங்கும் தனது பெயரை முன்னிலைப் படுத்த முனையாத மனிதர்!

மூத்தவர்களில் இருந்து இளையவர்கள் வரை என்றும் இனிக்கும் இனியவர்!

எப்போதும் எல்லோருக்கும் தனது அன்பான அரவணைப்பை அள்ளி வழங்குபவர்!

கு.பரா அவர்களை 17.06.18 அன்று பிரான்ஸில் நடைபெற்ற நாடகர்,ஊடகர்,ஏடகர்,ஏ.சீ.தாசீசியஸ் அவர்களின் நூல் அறிமுக விழாவில் இளையவர்களின் ஏற்பாட்டில் ஏ.சீ.தாசீசியஸ் அவர்களின் கரங்களால் பொன்னாடை போர்த்தியும் ஈழத்து சினிமா நாடக மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களின் கரங்களால் மாலை அணிவித்தும் பாராட்டி மதிப்பளித்தார்கள்.
அடுத்து

02.09.2018 அன்று பிரான்ஸ் கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்திய 14வது ஆண்டு நிறைவிழாவில் அவ்வொன்றியத்தின் உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

09.09.2018 அன்று பாரிஸ் பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம் நடத்திய 3வது ஐரோப்பிய ஆய்வியல் மாநாட்டில் அதன் அதிபர், பேராசிரியர், முனைவர் ச.சச்சிதானந்தம் அவர்கள் „கலைவித்தகன் „என்ற பட்டம் அளித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் கு.பரா அவர்களுக்கு பரிஸ் பன்னாட்டு உயர்கல்வி நிறுவனத்தின் மண்டபத்தில் பாராட்டு விழா நடத்தி பட்டமும் வழங்கி அவரை மேன்மை படுத்தினார் இது பரா அவர்களுக்கு ரகுநாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா என்பதும் குறிப்பிடத்தது.

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகம் நடத்திய „இராகசங்கமம் „இசை நிகழ்ச்சியில் கு.பரா அவர்களுக்கு „ஈழத்தமிழ்விழி“என்ற விருது வழங்கி கௌரவித்தது.
இன்னும் பல கலைச்சேவைக்கு பல பாராட்டுகளும் விருதுகளும் பெற „பரிஸ் பாலம் படைப்பகமும் வாழ்த்தி மகிழ்கிறது.
ஆகவே ஆளுமையுள்ள கலைஞன் எவனும் பாராட்டுகளை தேடிப்போகவேண்டியதில்லை
அவனை தேடி பாராட்டுகள் வந்து குவியும் என்பதற்கு கு.பரா அவர்கள் முன்னுதாரணம்!!
நன்றி! (K.P.L.)19.09.2018