கொஞ்சக் காலம்.!



விந்தை உலகினை
சிந்தையில் இறக்கி
மந்தை மனிதனின்
மானுட நேயத்தை தேடுகின்றேன்.
நடந்தது ஒன்று
நடப்பது இன்னொன்று
பிடித்தது ஒன்று
பிடிபடாது இன்னொன்று..
கிடைத்தது ஒன்று
கிடைத்தும் கிடையாமல்
போனது இன்னொன்று.
கிடைத்தது மேலென்றா
என குடையுது ஆழ் மனது.
இப்பிடித்தான் பலரது
வாழ்க்கை நீரோட்டம்
வரிசைப் படுத்தும்
பழைய முயற்சியிது..
எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டுமென அலைந்து
நிரந்தரம் எதுவும் இல்லை
என அறிந்தும் இந்த உயிரும்
சொந்தமில்லை என உணர்ந்தும்
அலைபவனே அலை பேசியில்
இல்லையடா உன் அற்புத வாழ்க்கை.
இவ்வுலகை விட்டு
அகலும் உயிரிது என
தெரிந்த மெய்யின்
மெய்யறிந்து பேராசை ஏனடா?
வா வந்து நம்
வாழ்வியல் மந்திரத்தை
பார் !பாரில்
எங்குமில்லாத சாதிய
வேறு பாடுகள்.,
நான் நீ எனும்
தர்க்கங்கள்.
அடே நீயும் கொஞ்ச காலம்
அவனும் கொஞ்சக் காலம்
வனப்பும் கொஞ்ச காலம்.
வாழ்க்கை தந்த பாடம்
இது கொரோனா சொன்ன வேதம்
சொத்து பத்தும் போச்சு
சொந்த பந்தமும் தூரமாச்சு
வாழ்க்கை
ஒரு வட்டம்
ஊரும் உன் பேர்
சொல்ல வாழு
பிறப்பின் பெரும் பயனதுவே..

ஆக்கம் கவிஞர் ரி.தாயாரிதி