*******கொள்ளி*******


சிறியவன் எப்போதும் சிரித்தமுகத்துடன் அணிந்து கொள்வது,
பெரியவன் போட்டுக்கழித்த பீத்தல்
ஆடை அணிகளையே .
வறியவர் வீடுகளில் இதுவெல்லாம் வழமையான வாசகம் தானே.
எறிக்கும் வெயிலில் என் செல்வங்கள் இரண்டும் ,பசியோடு,
செருப்புக் கூட இல்லாமல் தார்வீதியில்
நடக்குதுகளே பாவம்.
பறித்தெடுத்துப் பக்குவப்படுத்திய பற்றைக்காட்டு விறகுகளை,
கறிக்கடைச் சந்தையிலே பாதி விலைக்கு விற்றெடுத்து நானும்,
திரிந்து தேடி துணிமணி வாங்கி அவர்களுக்கு அணிவிப்பேனா?
எரிந்து புகையும் வயிருகளுக்கு தீனிபோட்டுத் தான் அணைப்பேனா ?
வறுமைக்காய் கொள்ளி பறிக்கும் வாழ்வற்ற குடும்பங்களே. கேளீர்,
வறுமைக்கு கொள்ளிவைக்கும் வாய்ப்புத்தான் வருவதேப்போ..?
..
வறுமை நேசன்