சிந்தனைச் சிற்பி கலாமோகனின் மணிவிழா

தென்மராட்சியின் புகழ்பூத்த சிற்பக் கலைஞர் மட்டுவில் கி.கலாமோகனின் மணிவிழா அண்மையில் (31.12.2017) சாவகச்சேரி கம்பன் கல்லூரி தமிழ்க்கோட்ட அரங்கில் ஓய்வுநிலை அதிபர் அ.கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெற்றது.
.
விழாவில் சிற்பமும் கலாமோகனும் என்ற பொருளில் கோப்பாய்; ஆசிரிய கலாசாலை பிரதிமுதல்வர் ச.லலீசன் சிறப்புரை ஆற்றினார்.
.
விழா நாயகர் தொடர்பான ஆவணப் படம் ஒன்று வெளியிடப்பட்டது. இதனை சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் வெளியிட்டு வைத்தார்.
.
தென்மராட்சி மக்கள் சார்பில் விழா நாயகனுக்கான விருதை ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.கந்தசாமி வழங்கினார்.
.
கலாமோகன் கலாகேசரி ஆ.தம்பித்துரையின் சீடர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவருடன் சேர்ந்து மாத்தளை முத்துமாரி அம்மன் தேர், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேர் என்பவற்றை வடிவமைத்தவர். முதன் முதலாக சரசாலை சிதம்பர விநாயகர் ஆலயத்தின் தேரை தனித்து வடிவமைத்தார். தற்போது இருபதுக்கும் மேற்பட்ட தேர்களை ஆக்கிய சிற்பக் கலைஞராக விளங்குகின்றார்.
(எனக்குக் கிடைத்த சில படங்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.)