சிறப்பும் பொறுப்பும்..

கால ஓட்டத்தில்
அராஜகப் புயலால்
கரை ஒதுங்கிய
கலைச் சருகுகள் நாம்..

உயிரைச் சுமந்து
கடலைக் கடந்து
அகதிப் பொதியாய்
அலையத் தொடங்கினோம்…

தரையிறங்கிய
தளங்களிலே நம்
தமிழையும் விடுதலையையும்
நேசித்த படி பணிகளை
மேற்கொண்டோம்…

தரித்த இடங்களில்
நின்று கலையால்
பலம் சேர்த்தோம்
பலர் களத்தில் நின்றும்
பணி செய்தனர்..

இவர்களில் ஒருவனாய்
சுதர்சன் எனும் நிதர்சன்
தேசியத் தலைவரின்
நேரடியில் மிருதங்க வித்தைகள்
பயின்று அவர் முன்றலிலே
அரங்க பிரவேசமும் கண்டான்..

மிகையல்ல.அவன்
ஆற்றலின் அறுவடையது.
காலம் இவனையும்
நகர்த்த நம்மோடு
கைகோர்த்து பிரான்ஸ்
கலைபண்பாட்டுக் கழக
பொறுப்பளராகவும் திகழ்ந்தான்.

பண்பும் பணிவும்
கலைஞர்களை உள் வாங்கும்
சிறப்பும் நேர்த்தியானது.
அவன் காலத்தில்
விடுதலையின் வேர்கள்
எனும் உயர் விருதும்
அறிமுகமானதும் நிஜமே.

கலை அரங்கங்களில்
இவன் விரல்கள்
மிருதங்கத்தில் நாதம் மீட்கும்
அழகும் தனி அழகெனலாம்.
இவர்கள் பொறுப்போடு
அடுத்த தலைமுறைகளை
உருவாக்கும் பாரிய பணிகளை
மேற்கொள்ளல் அவசியமானது…

கற்ற வித்தைகளை
கலை நுணுக்கங்களை
நிலையாக நின்று கற்றுக்
கொடுத்தல் காலத்தின்
கட்டாயமாகும்..இச் சிறப்பும்
பொறுப்பும் தொடர
இவனையும் வாழ்த்தி வரவேற்போம்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி