சுகந்தம் தரும் இயற்கை!கவிதை நகுலா சிவநாதன்

 

ஆகா! வண்ண வசந்தமே சுகந்தம் தரும் சுகமே!
ஆகாய விரிப்பில் சூரிய கதிரின் சுகந்தம்
வீரியமாய் விளங்கிடும் விண்ணிறைந்த கதிராலே
நேரிய பார்வையில் நேரான ஒளி விருட்சமாய் மேலே!

கண்ணைக்கவரும் பூக்களின் புதுவசந்தத்தேனே!
புளகாங்கிதம் உங்கள் பூரிப்பான விரிப்பிலே
வண்டுகளும் தேனீக்களும் வகையாகப் பூவிலே
மதுவுண்டு களித்திட்டு மகிழ்வாக முரலுமே!

ஓ! வசந்தமே சுகந்தம் தரும் இனிய காலமே!
சுழல்கின்ற காற்றுடன் சுந்தரத்தமிழும் கலந்து பேசி
குழலோடு நாதமும் கூடவே குருவிகளின் கீச்சும்
அழலாடும் வாழ்வில் அரிய பொக்கிசமாய் வசந்தம்

சுகந்தம் தரும் இயற்கையை சுகமாக நுகர்வதற்கு
வசந்தத்தின் வார்ப்புகள் வகையாக பாடுகின்றன
வரம்புகளின் உயர்வும் வளர்கின்ற நாற்றும்
நரம்புகளின் கணைத்தாக்கம்போல் நயமாக பாடுமே!

ஆக்கம்  கவி- நகுலா சிவநாதன்