சுபர்த்தனா படைப்பகம் வெளியிடும் புத்தம் புதிய பாடல் *கவிதை போல*!

இலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா படைப்பகம் வெளியிடும் இரண்டாவது பாடல் *கவிதை போல*.இசையமைப்பாளர் சாணு அவர்களின் நிகழ் காலத்திற்கு ஏற்ற இசைவார்ப்பு காதுகளில் தேன் வார்க்கிறது. *நினைத்தால் நீதான் கவிதை புள்ள சிரித்தால் நூறு நிலவு புள்ள* இந்த இரண்டு வரிகளைத் தூக்கி வைத்து என்னவோ செய்கிறீர்கள் தலைவா. நான் நினைக்கின்றேன், இனி வரும் காலங்கள் சாணுவுக்குப் பொற்காலமாக அமையும். இந்தப் பாடலை எழுதும் போதே கண் முன் வந்தவர் ஈழத்தின் பிரபல பாடகர் கோகுலன் சாந்தன் அவர்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடகர் இவர். இந்தப் பாடலின் இசைக்கும் வரிகளுக்கும் பாடகரின் குரல் மிகவும் பொருந்தி இருப்பதோடு, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. காதுகளைத் தொட்டுச் சென்ற மீரா என்ற பெயருக்குள் இப்படி ஒரு இனிமையான குரல் ஒழிந்திருப்பதை இந்தப் பாடல் மூலம் கேட்டு ரசித்தேன். பாடகி மீரா மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளார். மீராவின் குரலுக்குள் ஒரு குட்டிச் சிரேயா கோஷல் ஒழிந்திருப்பதை இசையமைப்பாளரும் உணர்ந்து கொண்டார். கொஞ்சம் கூடப் பந்தா இல்லாமல் அன்பை மட்டுமே சிந்தும் தன்னடக்கமான பாடகி என்பதால், மீராவின் குரல் இனிச் சுபர்த்தனா படைப்பகத்தில் தொடர்ந்து கேட்கும்.இலங்கையின் புகழ் பெற்ற தாள வாத்தியக் கலைஞர் பாணு தீபன் அவர்கள் இந்தப் பாடலுக்கு இசைப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் விரைவில் ஒரு பாடலையும் பாடவுள்ளார்.வழமை போல் மிகவும் சிறப்பாக ஒலிக்கலவை செய்து கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தம்பி பத்மயன். ஒளிப்பதிவு மற்றும் ஒளித்தொகுப்பு செய்துள்ளார் சசிகரன் யோ அவர்கள்.இந்தச் சிறப்பான பாடல் படைப்பில் இணைந்து கொண்ட உடன் பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள்!*கவிதை போல YOU TUBE – https://www.youtube.com/watch?v=67Est5z3UMw*-பிரியமுடன் கி.தீபன்