சொல்லடி ஜீவ சக்தி..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

நிலையில்லா
இவ்வுலகில்
விலையில்லா
பெரு நேரங்கள்
உனக்கானவையே…!

உருண்டோடும்
காலங்களில்
கடிகார முள்ளின்
சுழல் வேகம் கண்டு
அச்சம் நீள்கின்றது.!

உயிர்
கழண்டோடும்
முன்னர்உன்
திருக் கோலம்
தரிசனமின்றி
போயிடுமோ..?

வையகம்
காதலைக்
கையகப் படுத்துவதில்லை.
மெய்யகத்தே
கொண்டவரை
கை விட்டதுமில்லை..

பாரில்
வேரில்லா
மரங்களுண்டோ!
நீரில்லச்
சுணைகளுண்டோ!
காற்றில்லா
மண்டலங்களுண்டோ?

சொல்லடி என்
ஜீவ சக்தி.!
கொல்லடி என்
காதல் நினைவுகளை
நில்லடி ஒரு கணம்
மெல்லடி என்
கவிதைகளை….