{{சோறுகொண்டு வந்த என்}} {{சொப்பன சுந்தரியே………}}

காலை விடியுமுன்னே
கங்குலுக்குள் நானும்,
களனி காக்கவென்று
கண்விழித்தேன் கண்ணே‘
*
பாலைக் காச்சி நீயும்
பக்குவமாய் சீனிப்போட்டு
பரிமாறி என்னை
பணிக்கு விடைதந்தாய் பெண்ணே
*
வேளைக்கு முன்னமே நீ
வேலைகளை முடித்து,
வெண்டைக்காய் குழம்பும்
வெள்ளரிசிச்சோறும் சமைத்து,
*
சோலைகள் பல தாண்டி
சோலிகள் எனப்பாராது,
சோறுகொண்டு வந்த, என்
சொப்பன சுந்தரியே வாடி,
*
காலைத்தொடும் உன்,
கருநீளக்கூந்தலை காண,
கட்டிலின் நினைவுதான்
கண்ணுக்குள் வருகுதடி,
*
வாலையாட்டியபடி இளம்
வலைக்கன்று உன்னிடம் ஓடி
வந்துநிற்பதும் ,ஏதுக்கடி மானே?
வயிற்ருப்பசிக்கு பால் கேட்டோ?

களனி நேசன்