**சோறு கொண்டு வந்த சுந்தரியே**கவிஞர்.களனிநேசன்

 

காலை விடியுமுன் கங்குலுக்குள் நானும்,
…….களனி காக்க கண்விழித்தேன் கண்ணே‘
பாலைக் காச்சி நீயும் பக்குவமாய் எனக்கு.
……..பரிமாறி என்னை பணிக்கு விடைதந்து,
வேளைக்கு முன் விருந்து படைக்க எண்ணியே, ……..
வெண்டைக்காய் குழம்பும் மீனும் சமைத்து,
சோலை வெளிகள் பல தாண்டி எனக்காகவே,
…….சோறுகொண்டு வந்த சுந்தரியே என்னவளே.
காலைத்தொடும் உன்நீளக்கூந்தலை காண
……..கட்டிலின் நினைவுதான் வருகுதடி கண்ணே
வாலையாட்டியபடி இளம்கன்று உன்னிடம் ஓடி
…….வந்துநிற்பது தாய்ப்பசுவென்று எண்ணியோ?

ஆக்கம் களனிநேசன்