ஜெபநாமகணேசன் அவர்களும் வைத்தியசாலை நிர்வாக முகாமைத்துவதில் விஞ்ஞான முதுமானி பட்டம் வழங்கப்பட்டது

சங்கத்தின் தலைவரும், உசன் கிராம முன்னேற்றத்துக்கு முன்னின்று உழைப்பவருமாகிய வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் அவர்களும், இந்தச் சமூக சேவைக்குப் பக்கபலமாக நிற்கும் அவரின் மனைவி கனகேஸ்வரி ஜெபநாமகணேசன் அவர்களும் வைத்தியசாலை நிர்வாக முகாமைத்துவதில் விஞ்ஞான முதுமானி பட்டம் (Master of Science in Management & Administration of Ayurveda Institutions) பெற்றதையிட்டு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் – கனடா உசன் மக்கள் சார்பில் இருவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த மூன்று வருட காலக் கடின உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் அவர்களால் இந்த வெற்றியை அடைய முடிந்துள்ளது. வட பகுதியில் இந்த உயர் கல்வியைத் தொடர வசதி இல்லாத நிலையில் களனி பல்கலைக் கழகத்தில் அவர்கள் இருவரும் இந்த உயர் கல்வியைக் கற்று வந்தனர். குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொண்டு, அதே நேரத்தில் தம்மை நாடி வரும் நோயாளர்களையம் கவனித்துக்கொண்டு இந்த மைல்கல்லை அவர்கள் அடைந்துள்ளமை ஏனையோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைத்துள்ளது. இந்த மூன்று வருட காலமும் தேவையானபோது தனது பிள்ளைகளைப் பொறுப்பெடுத்து நல்வழிப்படுத்தியதோடு, தனது வைத்தியசாலைத் தேவைகளையும் கவனித்துக்கொண்ட தனது தாயாருக்கும் தான் இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பதாக வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் அவர்கள் தெரிவித்தார்.