ஜேர்மனியில் ஓர் இசை சகாப்தம் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.கோணேஸ் பத்மினி

ஜேர்மனியில் ஓர் இசை சகாப்தம்
ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.கோணேஸ் பத்மினி கோணேஸ் அவர்களின் சாதனை பற்றி கவிஞர் முகில்வாணன் ஈழ இசைச் சரிதையில் பலர் பிறந்தார்கள் பிறக்கின்றார்கள் இன்னும் பிறப்பார்கள்.
Muhilvanan
Muhilvanan

இசைக் கடலுக்குள் குதித்து இன்னிசை அமுதத்தின் ஆழத்தை அகலத்தை நீளத்தை உயரத்தை அளவிட்டு அதன் இன்பத்தை முழுமையாய் எடுத்தியம்ப எவராலும் இயலாது.

ஏழு சுரங்களிலும் எழுபத்தி இரண்டு தாய் ராகங்களில் இருந்தும் எண்ணற்ற இன்பங்கள் பூத்துக் குலுங்கி புதுமைகளைப் பொழிந்த வண்ணமே இருக்கின்றன.

இதில் புதுப்புது உத்திகளைக் கையாண்டு புத்தம் புது இசைகளை தோற்றுவிப்பவர் பலருண்டு. அதில் வெற்றி பெறுபவர் சிலர்தான் உண்டு. நான் வாழ்ந்த காலத்தில் ஈழ மெல்லிசை வரலாற்றில் வெற்றி பெற்ற கலைஞர்களில் எம்.பி.கோணேஸ் முதன்மையானவர். படித்தவரும் பாமரரும் ரசிக்கும் படி இசையமைத்தார். ஈழ இசை ரசிகர்கள் இவர் பாட்டை படி எடுத்தார்.

ஷஷநமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல்|| என்றார் பாரதி. கோணேசுக்குத் தொழில் இசையாகத்தான் இருந்தது. அவர் பேச்சிலும் மூச்சிலும் சுரங்களைத்தான் தரம் பிரித்தார். இரவூ வெகு நேரமாகியூம் சுரத் தட்டில் அவர் விரல்கள் இசையின் சூச்சுமத்தை தேடிக் கொண்டிருக்கும்.

நித்திரைக்குச் சென்றாலும் இசையோடுதான் சங்கமித்திருப்பார் போலும். அதிகாலையில் எழுந்து வந்து இரவூ இசையமைத்த பாடல்களுக்கு முன்னிசைகளை இடை இசைகளை லாவகமாகச் சேர்த்து விடுவார்.

கோணேஸ் பண்பாளர். பார்ப்பதற்கு அமைதியானவர். பழகுவதற்கு இனிமையானவர். நல்ல மனிதர். ஒரு காரியத்தைப் பொறுப்பு எடுத்தால் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற வெறியோட இயங்குவார். எதிர்ப்புக் கண்டு மலைப்புக்கொள்ளாமல் எதிர்நீச்சல் போடுவார்.

ஒரு கதவூ அடைக்கப்படுமேயானால் அழுதுகொண்டிருக்காமல் மாற்றுத் திட்டத்தை தோற்றுவித்து முன்னேறுபவர். இது எப்படி இவருக்குத் தெரியூம் என்று நீங்கள் நினைக்கலாம்! அதைத் சொல்லுவதற்காகத்தான் என் நினைவூக்கால்களை நீண்ட தூரம் நடக்க விடுகிறேன். சந்திக்குச் சந்தி நின்று திரும்பிப் பார்க்கிறேன். 1985இல் இசைக்கும் ஈழ விடுதலைக்கம் யேர்மனியில் பணியாற்றியவர் எம்.பி.கோணேஸ்

பலரும் பகீரங்கமாக இயங்கப் பயந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அவருடைய கரமும் இசை மூலம் விடுதலையோடு இணைந்தது. ஈழ விடுதலைப் போராட்டம் வீச்சோடு வீறு நடை போடத் தொடங்கிய காலந்தான் 1985. தமிழீழ ஆதரவாளர்கள் பலரும் இன்னும் சிலரும் புலம் பெயரத் தொடங்கினார்கள். நாங்களும் அகதிகளாக யேர்மனிக்குள் புலம் பெயர்ந்தோம்.

தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க யேர்மனியில் பாட்டு மூலம் விடுதலைப் பரப்புரையை தொடங்க எண்ணி அதற்கான கலைஞர்களை தேட முனைந்த போதுதான் கிளேன் என்ற இடத்தில் கோணேஸ் இருப்பதாகவூம் இலங்கையில் அவர் நடத்தி வெற்றி கண்ட இசைத் தென்றலை யேர்மனியிலும் நடத்த ஆர்வத்தோடு இருப்பதாகவூம் அறிந்தோம். அமைப்பின் பிரதி நிதியாக இருந்த செல்வா ஊடாக அவரை அழைத்து அமைப்பின் விருப்பம் அவரிடம் தெரிவிக்கப்பட்டதும் விடுதலைப் பாடல்களை மட்டும் பாடுவதென்றால் அதற்குரிய பாடல்கள் தேவை என்றார் கோணேஸ்.

அக்காலத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் மட்டுமே இசை வடிவம் பெற்றிருந்தன. 85க்கு முன் வேறு எவரும் விடுதலை மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துப் பாடவில்லை. இந்தச் சூழலில்தான் இசை வேள்வியை நடத்துவதற்காக நானும் கோணேசும் இணைந்து இயங்க வேண்டி வந்தது.

நான் 1984இல் கவிதை நூல் ஒன்றை எழுதியதால் பாடல்கள் எனக்குள் இருந்தன. கோணேஸ் மெல்லிசைப் பாடல்களை இசையமைத்த அனுபவம் இருந்ததால் அவருக்கும் இசையமைப்பது இலகுவாக இருந்தது. இசை சகல வார்த்தைகளையூம் ஏற்றுக்கொள்வதில்லை. ராக தாளத்துக்கேற்ப நெடில் குறில்களைத் தேடியே ராகம் ஏற்றுக் கொள்ளும்.

ஆதலால் பாடல்களை எழுதிய கவிஞரும் இசையமைப்பாளரும் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் வந்தது. அதற்காக நான் சில நாட்கள் அவரோடு தங்கி இருக்க நேர்ந்தது. நவீன கருவிகள் கைவசம் இல்லாத போது 23 பாடல்களை ஓர் இரு நாட்களில் இசையமைப்பது கடினமல்லவா?

அகதியாய் வந்த ஆரம்ப காலத்தில் வசதி வாய்ப்புக்கள் அதிகமில்லாத நிலையில். ஒரு சிறிய வீட்டில் இருந்தபடி ஜமகா கீபோட்டில் நான் எழுதிய பாடல்களுக்கும் எம்.பி.பரமேஸ் எழுதிய ஐந்து பாடல்களுக்குமான இசைகளையூம் அமைத்துக் கொண்டார். ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவதற்குரிய வாத்தியக் கருவிகளை வாங்கித் தருவதற்கு அமைப்பிடம் பணம் இல்லாததால் சிலரிடம் கடன் வாங்கியே அனைத்து வாத்தியக் கருவிகளையூம் வாங்கினார்கள்.

அந்தக் காலத்தில் ஆசிய இசைக்கருவிகளை யேர்மனியில் தேடி வாங்குவது இலகுவானதாக இருக்கவில்லை. ஒரு தபேலா வாங்குவதற்காக கிருபாலனும் நானும் மீற்றருக்கு மேலாக பயணம் செய்திருக்கிறௌம்.

கோணேஸ் தன் வீட்டில் பாடல்களை இசையமைக்கும் காலத்திலேயே அவருக்கு அறிமுகமான கலைஞர்களை விட மீதமுள்ள கலைஞர்களைஇ யேர்மனியின் பல பாகங்களில் இருந்தும் கனத்த சிரமத்துடன் அமைப்பினர் தேடி அலைந்து கண்டு பிடித்தார்கள். ஒரு நகரத்தில் இருந்து மற்றைய நகரங்களுக்கு அகதிகள் செல்லத் தடை இருந்தும் கலைஞர்க்ள பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.

வார இறுதி நாட்களில் கூட வீடுகளுக்குள் வாத்தியக் கருவிகளைக் குவித்து வைத்து சத்தம் செய்ய முடியாதென்பதாலும் நகருக்கும் இருக்கும் அதற்குரிய மண்டபங்களை ஒத்திகைக்கா வாடககைக்கு எடுப்பதற்கு பணம் இல்லாததாலும் விவசாயிகன் தங்கள் உழவூ இயந்திரங்களையூம் கலப்பைகளையூம் உரவகைகளையூம் பாதுகாப்பதற்காக வயல் வெளிகளின் மத்தியில் ஒதுக்குப் புறமாக கட்டியிருந்த மண்டபங்களில் தான் குளிர்தாங்கும் போர்வைகளை அணிந்தபடி அனைவரும் இசைப் பயிற்சிகளை எடுத்தார்கள். கோணேஸ் புயலிசைக்காக 27 பாடல்களுக்கு இசையமைத்தார். இசைத்திருவிழாவை நடத்திக் கொண்டு போகும் போது சில இடங்களில் புதுப் பாடல்களை எழுதவைத்து இசையமைத்து பாட வைத்தார்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்குமாக 23 பாடல்களையூம் 23 கலைஞர்களையூம் இணைத்து பயிற்சி கொடுத்தார். சில கலைஞர்கள் இசை அனுபவம் பெற்றவர்கள். இசையின் உச்சத்தைத் தொட்டவர்கள். சங்கீத வித்தகி கலாநாயகி சூரிய குமார் பாலச்சந்திரன் எம்.பி.பரமேஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அதில் கோணேசோடு மிகவூம் நெருக்கமாக இருந்து அவருக்கு பலவழிகளிலும் உதவியாக இருந்தார் பாலசந்தர்.

இன்னும் சிலர் இசை ஆர்வம் இருந்தும் மேடையில் பாடிய அனுபவம் இல்லாததால் புதிய பாடகர்களை பயிற்குவிக்கும் தன் திறமையினால் அவர்களையூம் தரமான பாடகர்களாக உருவாக்கினார் கோணேஸ். குறிப்பாக அனுரா போன்ற நல்ல பாடகர்களை இனங் காட்டினார்.

சில வாத்திய கருவிகளை மீட்டுவதற்கு தமிழ்க்கலைஞர்கள் கிடைக்காத காரணத்தினால் யேர்மன் கலைஞர்களை இணைத்து பக்க இசையை வழங்குவது நல்லதென்று என்னிடம் சொன்னார். அதற்கு நான் அது எப்படி முடியூம் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க காலம் காணாதே என்றேன். உலகத்தில் மூல இசை ஒன்றுதான்கவிஞர். சரிகமபதநி என்று தமிழில் சொல்கிறௌம். அதையே மேற்கத்திய இசையில் தோ றே மி பா சோ லா சீ என்று ஐந்து கோடுகளைக் கீறி அதற்குள் சுரங்களை அமைத்தால் போகிறது என்று கூறி எங்கள் பாடல்களுக்கு ஜேர்மன் கலைஞர்களும் வாத்தியம் வாசிப்பதற்கான வட்ட வட்ட மேற்கத்திய சுர குறிப்புக்களையூம் எழுதிக் கொடுத்து அவர்களையூம் இலகுவாக இணைத்துக் கொண்டார்.

இனி அறிவிப்பாளர்க்ள தேடும் படலம் தொடங்கியது. மியபுஸ் என்ற இடத்தில் இருந்து வெங்கலக் குரலோன் ஞானபண்டிதன் என்பவரைத் தேர்ந்து எடுத்து விட்டோம். பின்பு ஒரு பெண் அறிவிப்பாளரை யேர்மனியில் தேடத் தொடங்கிய போதுதான் சிரமங்களைச் சந்தித்தோம். பல பெண்கள் பயத்திலும் வெட்கத்திலும் இணைய மறுத்து விட்டார்கள்.

அதில் இரண்டு பெண்கள் எங்களோடு இணைய சம்மதித்தார்கள். அவர்களிடம் வசனங்களை எழுதிக் கொடுத்து பேச வைத்ததில் ஒருவருக்கு குரல் வளம் சரியாக அமையவில்லை. அடுத்தவருக்கு உச்சரிப்பு சரியாக வரவில்லை. ஒரு வாரம் அலைந்து திரிந்தும் தோல்வி அடைந்ததால் சோர்ந்த மன நிலையில் மறுபடியூம் கோணேஸ் வீட்டுக்கு வந்தேன். என்ன கவிஞர் சோகமாக இருக்கிறீர்கள். தேடிய இடங்களில் அறிவிப்பாளர் கிடைக்க வில்லையா? என்று கேட்டார். ஆம் என்றேன். அவர் உடனே பத்மினியை பேசவிட்டு பார்த்தால்

என்ன என்று கேட்டார். யாருக்குள் என்ன சக்தி இருக்கிறதென்று யாருக்குத் தெரியூம். பெரிய ஆலமரத்தை உருவாக்கும் சக்தி நிலத்துக்குள் இருப்பது போல். பெரியதொரு அறிவிப்பாளர் பத்மினிக்குள் இருப்பதை அவர் கணவர் அறிந்திருந்தார் போலும். பார்ப்போமே என்று கூறியபடி நான்கு வசனங்களை எழுதிக் கொடுத்தேன். கிண்கிணீர் என்கிற கைத்தாளம் போல் கனீர் கனீர் என்ற உச்சரிப்பு ஒலியோட ஒரு கம்பீரத்தைக் கொடுத்தது அந்தக் குரல். ஒரு அiவையை கட்டுப்படுத்தும் சக்தி அந்தக் குரலுக்குள் இருந்தது. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் என்ற பாடல் வரிகளைத் தான் நினைத்துக் கொண்டேன்.

எங்களில் ஒரவராய் பத்மினி பக்கத்தில் இருந்தும் நாங்கள் அவரை அடையானம் காணாது அங்கும் இங்கும் அறிவிப்பாளர் தேடி அலைந்து திரிந்தோம். பெண்களை அடிமைப்படுத்தும் சமூகத்தின் மத்தியில். தன் மனைவியின் அறிவூக்கும் திறமைக்கும் மதிப்புக் கொடுக்கும் ஒல நல்ல மனிதராக கோணேஸ் இருந்தார். பத்மினி கோணேசின் அறிவிப்பாளர் அரங்கேற்றம் புயலிசை மேடையில் தான் அரங்கேறியத என்பதைச் சொல்வதில் பெருமையாக இருக்கிறது.

அன்று தொடங்கிய அறிவிப்பாளர் பணி தேங்கி திகைத்து சோர்ந்து இடையில் நின்றுவிடாது இன்றுவரை கனடாவில் தனி ஒரு வானொலியை நடத்தி வரும் அளவூக்கு. பத்மின கோணேஸ் உரம் பெற்று இருப்பது பாராட்டுக்குரியதாகும். மூன்று மணிநேர இசைநிகழ்ச்சியை யேர்மனியின் பல பாகங்களிலும் மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் தொடர்ச்சியாக நடத்தி வந்தோம்.

முதல் நிகழ்ச்சியை நொயிஸ் நகரத்தில் நடத்தினோம். நொயிஸ் நகரத்தைச் சூழ உள்ள சகல தமிழ் மக்களும் வந்த வண்ணம் இருந்ததால் மண்டபம் நிறைந்து வழிந்தது. முதல் நிகழ்ச்சியை நடத்தி முடித்த அரை மணி நேரத்தின் பின் அதே இடத்தில் மறுபடியூம் இரண்டாவது முறையாகவூம் நிகழ்ச்சியை நடத்த வேண்டி வந்தது. திரை விலகியதும் கோணேஸ் தன் இசைப் பரிவாரங்களோடு மேடையை நிறைத்து நிற்பார். வெங்கலக் குரலோன் ஞான பண்டிதனும் இன்னிசைக் குரலில் பத்மினி கோணேசும் அறிவிப்பாளர்களாக நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்கள்.

முதல் நிகழ்ச்சி நிறைவடைந்ததும் வெளியில் வந்த ஒருவர் என்னைப் பார்த்துக் கூறினார் இந்த நிகழ்வூ உள்ளத்தில் உள்ள அடிமை அமுக்கத்தைப் போக்கி. உள்ளத்தில் ஒரு உஸ்ணப் பெருமூச்சை உண்டாக்கியது என்றார். எங்கள் தேசத்தின் சோகத்தை வீரத்தின் வேகத்தை விடுதலையின் தாகத்தை ராகத்துள் வடித்துக் கொடுத்தார் கோணேஸ்.

எனது வார்த்தைகளுக்குள் இருந்த உணர்ச்சிகளை ராகதாள பாவத்தில் உயிரோடு எழுப்பி உலவ விட்டார் கோணேஸ். மூன்று மணி நேரம் அரங்கினுள் கூடியூள்ள அத்தனை தமிழர்களின் அங்கத்தின் அணுக்களிலம் விடுதலை உணர்வை பொங்கி எழச் செய்தார்கள் கலைஞர்கள். மக்களால் வரவேற்கப்பட்ட மன நிறைவூள்ள நிகழ்ச்சியை கோணேஸ் வடித்துக் கொடுத்தார்.

முப்பது வருடங்கள் சென்றதின் பின்னார் இன்று நினைத்தாலும் இதயத்தின் ஓர் ஒரத்தில் அந்த நரம்புகள் சுரம் பாடுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கிறது. புயலிசையின் முதல் பாடலை சங்கீத வித்தகி கலாநாயகி சூரியகுமார் பாடுவார். சபை வணங்கி நிற்கும். அந்தப் பாடல்தான் தமிழ் ஈழ விடுதலைப் புலிக் கொடி பற்றிப் பாடப்பட்ட உலகின் முதற்பாடலாகும்.

65க்கு முன் பகிரங்கமாக எந்த நினைவூ நிகழ்வூகளும் நிகழ்த்தப்படவில்லை.

மூன்று மணிநேர விடுதலைப் பரப்புரை பாடல்கள் எங்கள் நடத்தப்படவூம் இல்லை.

இந்த இடத்தில் அந்தப் பாடலைத் தருவது நல்லதென்று நினைக்கிறேன்.

பல்லவி
ஆதி முதல் குடிதான்
தமிழ்க் குடி
ஆதித் தமிழர் கொடி
புலிக் கொடி
அனுபல்லவி
பண்டை நாட்டரசரின்
படையில்
உயர்ந்த கொடி.
அண்டை நாட்டரசரை
அஞ்சிட
வைத்த கொடி
வண்டமிழ் நாடெங்கும்
வளையாத
புலிக்கொடி
இண்டமிழ் ஈழத்தாயின்
இன்னலைப்
போக்கும் கொடி….
என்று அந்தப் பாடல் வரிகள் நீ@கின்றன.

நான் அறிந்த வகையில் கோணேஸ் புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்கள் தமிழ் அறிவூ பெறாது வளர்ந்து வருவதை உணர்ந்த கோணேஸ் அவர்களுக்காக ஒரு தமிழ் பள்ளிக் கூடத்தை 1987இல் அவர் வாழ்ந்த பகுதியாம் கிளேனில் அரங்கேற்றம் என்ற பெயரில் தொடங்கி நடத்தினார். அந்தப் பாடசாலையின் தொடக்க விழாவில் அடியேன் சிறப்புரையை நிகழ்த்தினேன்.

அவர் பாடசாலையில் தமிழோடு நுண்கலைகளும் கற்பிக்கப்பட்டன. கர்நாடக சங்கீதமும்இ மேற்கத்தேய சங்கீதமும் போதிக்கப்பட்டன. அவரிடம் கீபோர்ட் படிப்பதற்காக பல மாணவர்கள் வந்தார்கள். அந்த மாணவர்கள் நலம் நாடிஇ கர்நாடக சங்கீதத்தையூம் மேற்கத்தேய இசையையூம் இணைத்தபடி ஓர் இசைப் பயிற்சி குறிப்புக்கள் அடங்கிய நூலையூம் எழுதி மாணவர்களுக்கு வழங்கினார்.

சிலர் செய்யாததை செய்தது என்றும் தெரியாததைத் தெரியூம் என்றும் சொல்லி ஏன் நடிக்கிறார்கள் என்று விளங்கவில்லை. சரித்திரத்தில் கூட கலப்படமா? இசையோடு வாழ்பவனை வீழ்த்த முடியாது. உண்மையான கலைஞன் ஆற்றுநீரை அழுக்கு நீரை குளத்து நீரைப் போல ஓர் இடத்தில் தேங்கி குந்திக் கொண்டு இருக்க மாட்டான். ஊற்றுத் தண்ணீரைப் போல் ஓடிக்கொண்டே இருப்பான். போகின்ற இடமெல்லாம் புதுமைகளையூம் புத்துணர்ச்சிகளையூம் தோற்றுவித்துக் கொண்டே இருப்பான். எந்த எதிர்ப்புக்களாலும் திறமையை சிறைப்படுத்த முடியாது.

கோணேஸ் தன்னுடைய இசை வாழ்வின் 45 வருடகாலப் பகுதிக்குள் எத்தனையோ இருட்டடைப்புக்களையூம் எத்தனையோ கதவடைப்புக்களையூம் எத்தனையோ கழுத்தறுப்புக்களையூம் சந்தித்து சந்தித்து அத்தனையூம் தாண்டி இன்றும் கலைத் துறையில் முனைப்போடு முன்னணியில் நிமிர்ந்து நிற்பது முத்தமிழுக்கு பெருமையல்லவ? இந்த நேரத்தில் அவரைப் பாராட்டுவது நம் கடமையல்லவா? வாழ்க! கோணேஸ். வளர்க! கோணேஸ் என்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

–கவிஞர் முகில்வாணன்