தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் நம் தேசியக் கலைஞர் ரி. தயாநிதி

மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் எங்கள் சின்னக்குட்டி…..சிறப்பு..

சென்னை தி நகரில் இனிய நந்நவனம் பவுண்டேசனால் நிழ்த்தப்பட்ட சர்வதேச சாதனைப் பெண்கள் நிகழ்வில் உலகம் பூரராக பரந்து வாழும் தமிழர்களில் சாதனை புரிந்து வரும் பெண்கள் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு 2020ன் சாதனைப் பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். மத சார்பற்று பெண்கள் இலங்கை, இந்தியா, மலேசியா, கனடா, லண்டன் ,யேர்மனி, மற்றும் அரபு நாடுகளில் வாழ்பவர்கள் என தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சிக்குரியதே..

இன் நிகழ்வில் சிறப்புக் கலைஞராாக பிரான்ஸ் மண்ணில் வாழும் நம் தேசியக் கலைஞர் ரி. தயாநிதி சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டதோடு நமது மண்ணில் இன அழிப்போடு காணாமல் ஆக்கப் பட்டோரின் தேடல் அவலம் பற்றி „கண்டனியளோ „எனும் குறும் சித்திரத்தை தனது தனி நடிப்பின் மூலம் அரங்கேற்றி அரங்கங்கத்தை கண்ணீரில் நனைய வைத்ததோடு காணாமல் போனோருக்கான தேடலுக்கு உரக்க குரல் கொடுக்கும் ஓளியை படைப்பாளிகளும் சாதனைப் பெண்களும் கவனமெடுக்க வேணும் என்பதையும் வலியுறுத்தியதாக செய்திகள் பதிவாகியுள்ளன. கூடவே „மாவீர் நினைவு சுமந்து“ „மனமாசு“ எனும் குறும்படங்களத் தயாரித்து பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 15ம் ஆண்டு சுனாமி வணக்க நிகழ்வில் திரையிட்ட இயக்குனர் திருமதி சிபோ சிவகுமாரன் யேர்மனியும் சாதனைப் பெண்ணாக தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றமை மகிழ்ச்சியே மற்றும் விருது பெற்ற ஏனைய தமிழ் பெண்களையும் வாழ்துவதோடு பாராட்டுகின்றோம்..காதல் கோட்டை இயக்குனர் தயாநிதிி அவர்களை பாராட்டி மகிழ்வித்தார்.இன் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த இனிய நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் பணி பாராட்டுக்குரியதே…