**தாங்குமோ தாய்மனம்** **ஆறுமோ எம்மனம்**



ஆண்மகன் பிறந்தான்
ஆசையுடன் வளர்ந்தான்
அங்கும் இங்கும் இவன்
ஓடிஆடித்திரிந்தான்
சிறகு முளைக்குமுன்னே
சிங்கார நடைநடந்தான்
கண்பட்டுப்போனதுவோ
விதிவந்து சேர்ந்ததுவோ
தவறிப்போய் வீழ்த்துபோன
செல்லமகன் சுர்ஜித்
குரல்கேட்டு இங்கே
பெத்தமனம் பதறியதோ
உலகெல்லாம் சோகமாச்சோ
மண்ணுக்குள் ஆழம்போய்
சிக்குண்டகோலம்கண்டு
காப்பாற்றபலர்வந்து
முயற்சிகள் பலசெய்து
பலனின்றிப்போனதையோ
இறைவா இறைவா என்று
குழந்தை உயிர்பிழைக்க
எல்லோரும் வேண்டிநின்றார்
வல்லரசாம் என்று சொல்லும்
பேயரசு அரசியல் சாக்கடை
மூடாமல் பல உயிர்
போகுதையோ
மூடாத குழிகளால்
விழுந்துபலர் இறப்பதற்க்கு
பொல்லாத அரசுதானே
பொறுப்பாக வேண்டும்
என்பேன்
வெள்ளைவேட்டி
கட்டிவந்து
கட்சிக்கொடி
ஏந்திநின்று
இனி நிவாரணம்
தந்திடுவார்
பாழான அரசியல்
வேடம்கொண்டு
போதுமடா போதும்
உங்க நடிப்பு
தாயே ஆறுதல்
கொள்ளம்மா
உன்மகன்
ஆண்டவன்
மடியிலம்மா

மயிலையூர் இந்திரன்