தாயகப் பாடல்கள் பலவற்றை பாடிய கலைஞர்கள் கனடாபைரவி இசைக் கல்லூரிகொரவித்தது

„தாயகப் பாடல்கள் பலவற்றை தமது சொந்தக் குரலால் பாடி சிறப்பித்த கலைஞர்கள் கனடாவில் இயங்கும் பைரவி இசைக் கல்லூரியால் கொரவிக்கப்பட்ட தருணங்கள்“
. . . . . . . . . . . . . . . . . . . . . . .

தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தாயகப் பாடல்களைப் பாடி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் புகழப்பெற்ற திருவாளர்கள் பொன் சுந்தரலிங்கம், வர்ண இராமேஸ்வரன், திருமதி ராதிகா சுப்பிரமணி;யம், திருமதி மேர்லின் இமானுவல் மற்றும் பாடல்கள் பலவற்றை யாத்த பண்டிதர் சா. வே.. பஞ்சாட்சரம் ஆகியோர் மேடையில் உயர்ந்த கௌரவம் வழங்கிப் பாராட்டப் பெற்றனர்.

இவர்களைக் கௌரவிக்கும் வகையில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம், கல்விச் சபை உறுப்பினர் யாழினி மற்றும் உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், அகணி சுரேஸ்;டாக்டர் போல் ஜோசப் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பெற்று இந்த கௌரவங்களைச் செய்தனர்.

அத்துடல் தாயகப் பாடல்களைப் பாடி மகிழவும் உணர்வைப் பெறவும் விரும்பும் எமது புலம் பெயர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் பல தாயகப் பாடல்கள் அடங்கிய ‚தாயகப் பாடல்கள் தொகுப்பு ஒன்றும் பைரவி நுண்கலைக் கூடத்தினரால் அச்சிடப்பெற்று இலவசமாக வழங்கப்பெற்றன.